
அண்மையில் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் நடந்துமுடிந்த தேசிய மட்டத்திலான தமிழ்த்தினப்போட்டிகளில் எமது கல்லூரியில் தரம் 6ல் கல்விகற்கும் செல்வன்.விஜயகுமார் வத்சாங்கிதசர்மா அவர்கள் இரண்டாம் பிரிவிற்கான தனியிசை நிகழ்வில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டிகளின் இரு நிகழ்வுகளுக்கு தெரிவாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தாம் பங்குபற்றிய இரண்டு நிகழ்வுகளிலுமே தங்கப்பதக்கங்களை சுவீகரித்து தமது பாடசாலைக்கும் தாம் பிரதிநித்துவம் செய்த மாகாணத்திற்கும் பெருமையை ஈட்டிக்கொடுத்துள்ளனர். ஏலவே எமது கல்லூரி விவாத அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது அனைவரும் அறிந்ததே.
தங்கப் பதக்கத்தை வென்ற மேற்படி மாணவனை பாராட்டும் வைபவம் அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
சாதனை புரிந்த மாணவன் தன்னுடைய பயிற்றுவிப்பாளரும் கல்லூரியின் நீண்டகால இசை ஆசிரியருமான திரு.கி.பத்மநாதனுடன் இணைந்து நீண்டகாலமாக மேற்கொண்ட பயிற்சியின் பலனை இன்று கண்டிருப்பதாக பாராட்டு வைபவத்தில் உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் கூறினார்.
மேற்படி ஆசிரியர் பாடசாலை நேரங்களில் மட்டுமல்லாது மாலை நேரங்களிலும் தனது வீட்டிற்கு வருகை தந்து தனக்கு பயிற்சி அளித்ததாகக் கூறிய செல்வன் வத்சாங்கிதசர்மா தனது இந்த வெற்றிக்கு தனது பெற்றார் மிகவும் ஊக்கம் தந்திருந்ததாகவும் குறிப்பிட்டான்.
சிறு வயதிலேயே பெரிய சாதனையை செய்வதற்கு தனது மகனுக்கு வழியமைத்துக் கொடுத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த மாணவனின் தாயார், தனது மகன் மாத்திரமல்லாது ஏனையமாணவர்களும் அவரவருக்கு விருப்பமான துறைகளில் சாதனைகள் பல செய்து கல்லூரிக்கு மேலும் மேலும் புகழ் ஈட்டிக்கொடுக்க வேண்டும் என வாழ்த்தினார்.
சிறிய வயதிலேயே தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற செல்வன் வத்சாங்கித சர்மா தனது கல்லூரிக்காலத்தில் மேலும் பல பதக்கங்களை பெற்றுத்தருவார் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆசியும் ஆகும்.






Comments (4)
...
Hi Tambi Vijayakumar,
Congratulation and your parents & school must be very proud of you. Keep it up and hope you will still do more in coming years.
Siva
Sydney
Congratulation and your parents & school must be very proud of you. Keep it up and hope you will still do more in coming years.
Siva
Sydney







Congratulation and our best wishes.
k.s.s.vaheesan A/L 2008 COM