JaffnaHindu.Org

Jaffna Hindu College

Thursday
May 17th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home Sports Outdoor Football Tournament 2011 - Nallur Division

Football Tournament 2011 - Nallur Division

E-mail Print PDF

The Jaffna Hindu Under 16 Football team became the champions, Under 18 team came second, and the Under 14 team won the third place in the Nallur division football tournament 2011.

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - நல்லூர் கோட்டம் 2011

19.10.2011 அன்று யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற நல்லூர்கோட்ட மட்ட உதைபந்தாட்ட சுற்றில் யாழ்.இந்துக்கல்லூரி 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 3வது இடத்தை இலகுவாக தட்டிச்சென்றது 

அத்துடன் 20.10.2011 அன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நல்லூர் கோட்ட மட்ட உதைபந்தாட்ட சுற்றின் இறுதிப்போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியை எதிர்த்து திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலய அணி மோதியது. இப்போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாய் அமைந்தது. ஆட்டத்தின் 12.05வது நிமிடத்தில் 16 வயதுக்குட்பட்ட யாழ் இந்து உதைபந்தாட்ட அணியின் உபதலைவர் எஸ்.விஜிந்தன் கோல் அடித்து அசத்த யாழ் இந்து போட்டியில் 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நல்லூர் கோட்ட மட்ட உதைபந்தாட்டச் சுற்றில் முதலிடத்தை தட்டிச்சென்றது. 

அத்துடன் 21.10.2011 அன்று யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நல்லூர் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிற்கான 18 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் யாழ் இந்துக்கல்லூரி அணியும் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய அணியும் மோதின. இப்போட்டியில் பரஞ்சோதி வித்தியாலய அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச்சென்றது. யாழ்இந்துக்கல்லூரி இரண்டாவது இடத்தை தட்டிச்சென்றது. இத்துடன் அணியின் அணைத்து வீரர்களையும் யாழ். இந்துக்கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் A.C.S.Croos அவர்களையும் யாழ் இந்துவின் அதிபர் மற்றும் பாடசாலை சமூகமும் உதைபந்தாட்ட சமூகமும், விளையாட்டு துறை பொறுப்பாசிரியரும் பாராட்டி அவர்களது சேவை மேலும் தொடர வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 


Comments (0)

Write comment

smaller | bigger
security image
Write the displayed characters

busy
Last Updated ( Wednesday, 26 October 2011 04:29 )  

Facebook

OBA International

 

Mr.S.Senthilnathan New President OBA UK

 

 

Mr.Pon.Balendran New President OBA Canada

 

Mr.P.Vivekanandha New President JHCA UK

 

 

Mr.K.Jeyakanthan New President OBA Sydney

 

 

Mr.S.Thavendran New President OBA Australia

 

Mr.R.Sivaranjan New President OBA Norway