
Jaffna Hindu College won 8 Gold Medals in Northern Province athletic meet. In addition to these gold medals they succeeded to get one silver and two bronze.Mas R.Senthooran got Gold Medal in under 15 High Jump and Mas R.Satheesan got Gold Medal in under 21, 1500 M and Bronze Medal in 800 M races.
Mas G.Sivendran got Gold Medal in under 19 400 M and Bronze Medal in 200 M races. Mas K.Prakash won Gold Medal in under 21 Shot Put also a Gold Medal in Disk throw.
Master V.Jusminan from under 19 group won 3 Gold Medals and 1 Silver medal and selected as the best athletic in the Northern Province 2011. He got Gold Medals in Long Jump,4x100 and 4x400 also got Silver Medal in Triple Jump.Also Mas.R.Senthooran was selected as best field athletic in under 15 and Mas.G.Sivendran was selected as the best track athletic in under 19 age groups.
Jaffna Hindu performed very well and got a benchmark in Northern Athletics in this meet. WebTeam congratulates all the Athletic Team members, S.Ramanan (Coach) ,Mr.K.Swaminathan (POG) and Principal for this performance.
Appreciation and Award Ceremony was held at Jaffna Hindu College Grounds on 13th of July and Mr.S.Ragavan former President of Colombo OBA, Mr.Shan Thayalan, Principal, Teachers and Students participated and congratulated the winners.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இம்முறை தனிச் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகிறது. போட்டிகளில் எட்டு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று இம்முறை பதினொரு பதக்கங்களாக தனது நிலையை உயர்த்தியுள்ளது.
15வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரத்தினசிங்கம் செந்தூரன் 175CM உயரம் பாய்ந்து முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.19வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் க.சிவேந்திரன் 400M ஓட்ட நிகழ்வில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் 200M ஓட்ட நிகழ்வில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.
19வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மைதான நிகழ்வில் வசீகரன் ஜஸ்மினன் நீளம் பாய்தல் நிகழ்வில் 6.71M பாய்ந்து முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் தத்திமதித்துப் பாய்தல் நிகழ்வில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.21வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரவிச்சந்திரன் சதீசன் 1500M ஓட்ட நிகழ்வில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் 800அ ஓட்ட நிகழ்வில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார். 21வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் க.பிரகாஷ் குண்டுபோடுதல் நிகழ்வில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் தட்டெறிதல் நிகழ்விலும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.
இதே வேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 19வயதுக்குட்பட்ட ஆண்களிற்கான 4x400M அஞ்சலோட்ட நிகழ்வில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் 4x100M அஞ்சலோட்ட நிகழ்விலும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டமை பாராட்டத்தக்க விடயமாகும்.போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் திறமை அடிப்படையில் 15வயது ஆண்களுக்கான மைதான நிகழ்வில் சிறந்த வீரனாக உயரம் பாய்தல் நிகழ்வில் பங்குபற்றிய வீரன் இ.செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
19வயது ஆண்களிற்கான சுவட்டு நிகழ்வில் சிறந்த வீரனாக க.சிவேந்திரன் 400M ஓட்ட நிகழ்விற்காக தெரிவு செய்யப்பட்டார்.அதே போலவே 19வயதுக்குட்பட்ட ஆண்களிற்கான மைதான நிகழ்வில் சிறந்த வீரனாக வ.ஜஸ்மினன் நீளம் பாய்தல் நிகழ்விற்காக தெரிவு செய்யப்பட்டார்.2011ல் நடைபெற்ற வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களிற்கான அனைத்து வயதுப் பிரிவிலும் சிறந்த வீரன் என்ற பெருமையை இம்முறை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வசீகரன் ஜஸ்மினன் பெற்றுக்கொண்டமை கல்லூரிச் சமூகத்திற்கு பெருமைக்குரிய விடயமாகும்.
இப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அனைவரும் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்டத்திலான மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் வீரர்களிற்கான பயிற்சிகளினை அதிபர், விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மேற்பார்வையில் பயிற்சியினை செ.றமணனும் பயிற்சினையும் பயிற்சி நெறிப்படுத்தலினையும் மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் ஆகியோர் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் 13-07-2011 நேற்று புதன்கிழமை கல்லூரி சமூகத்தினால் சிறப்பாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக லயன்.ராகவன் மற்றும் யாழ் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சண்.தயாளன் கலந்து கொண்டனர்.






