The Norway OBA celebrated its first "Kalaiyarasi" 2010 on Saturday, 13 November 2010 in Skedsmo Samfunnshus, in Norway.
The Kalaiyarasi 2010 evening was a grand success with full of entertaining music, dance and dramas. More than 350 participated at the event and enjoyed the evening.
Mr.Kasinather Sivapalan (JHC 1954-1960), a Senior Lawyer and a leading human rights activist was the chief guest for the evening.
Mr. Sivapalan in his guest speech recalled his school days and his days in the JHC hostel.
The function lasted for five hours.நோர்வே பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கன்னி 'கலையரசி 2010' மிகப் பெரிய வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது.
எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாதவாறு உலகளாவிய வலையமைப்பினை கொண்டுள்ள யாழ் இந்து பழைய மாணவர் சங்கங்களின் வரிசையில் நோர்வே கிளை தனது கன்னி கலையரசியை அரங்கேற்றியதை இட்டு இந்து சமூகத்தினர் பெருமை கொள்கின்றனர்.
நோர்வே பழைய மாணவர் சங்கம் 2006 ஆண்டு அவதரித்து இந்த குறுகிய காலப்பகுதியிலே பாரிய வளர்ச்சியடைந்து கன்னி கலையரசியை அரங்கேற்றுவது பெருமைக்கும் பேருவகைக்குமுரியதோர் விடயமாகும்.
முந்நூற்று ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட 'கலை அரசி 2010' விழாவில் நடைபெற்ற பாட்டு நடன நாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்ணிற்கும் செவிக்கும் மனத்திற்கும் பெரு விருந்தாக அமைந்தன.
கல்லூரி கீதத்துடன் ஆரம்பித்த இவ் விழாவின் வரவேற்புரையை நோர்வே பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் அருள்தாஸ் வழங்கினார்.
இக் கலை விழாவில் சிவாஞ்சலி நர்த்தனாலயா மற்றும் நர்த்தன காவியா மாணவர்களின் நடனமும், 'முட்டைக்கு வந்த மவுசு,' 'ஏகாம்பரம்' நாடகங்கள் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வித்தன. 'Root' இசைக் குழு இன்னிசை வழங்கி விழாவை சிறப்பித்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திருவாளர் காசிநாதர் சிவபாலன் அவர்கள் 2010 இல் கலை அரசி விழா காணும் நோர்வே யாழ் இந்து பழைய மாணவர்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவின் இறுதியில் நிகழ்வு சிறப்புற உதவிய அனைருக்கும் திரு. இராசதுரை சிவரஞ்சன் நன்றி கூறினார்.
திரு.சிவபாலன் தனது சிறப்புரையில் கல்லுரி கால வாழ்கையை நினைவு கூர்ந்ததுடன் தமிழர் பிரதேசத்தில் இன்றைய கல்வியின் நிலையை நினைவுறுத்தி எமக்கு முன் உள்ள கடமையை நினைவூட்டினார்.
"தலை சிறந்த கல்விக்கூடத்தில் கல்வியினைப் பெற்ற நாம், அதே தகைமையை, வாழ்க்கைத்தரத்தினை எம் வழித்தோன்றல்களுக்கு எமது பிரதேசங்களில் ஏற்படுத்திக் கொடுத்தல் தலையாய கடமையாகும். இல்லையேல் நாம் கற்றதனால் ஆய பயன் என்?" என்றார் அவர்.
காசிநாதர் சிவபாலன் அவர்கள் சர்வதேச உறவுகள் தொடர்பில் முதுகலைமாணி பட்டம் பெற்றதுடன் இலங்கை, இங்கிலாந்து அவுஸ்திரேலியா நாடுகளில் பதிவு பெற்ற சட்டத்தரணி ஆவார். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
அவரால் வழங்கப்பட்ட விழாவின் சிறப்புரையிலிருந்து:
'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக'

'Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning'
என்பது எமது கல்லூரியின் முகப்புக் குறள்.நம் கல்லூரியில் கசடறக் கற்ற பலர் தாயகத்திலும் உலகப்பந்தில் பல பாகங்களிலும் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
பலர் நமது நாட்டில் மீயுயர் நீதிமன்ற பிரதம நீதியரசராக (திரு.சர்வானந்தா), சட்ட மா அதிபராக (திரு.சிவா பசுபதி), பல்கலைக்கழக உப-வேந்தராக (திரு.பொன்.பாலசுந்தரம்பிள்ளை), கல்விமான்/senator ஆக (மர்ஹூம்.A.M.A.அசீஸ்), அரசியல்வாதிகளாக (திருவாளர்கள்.கு.வன்னியசிங்கம், பொன்.கந்தையா) விளங்கியிருக்கிறார்கள்.
'யாழ்ப்பாணத்தில் பல ஆங்கில பாடசாலைகள் இருந்த வேளை ஆனால் அவை யாவும் கிறிஸ்தவப் பள்ளிகள். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கூட யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றார். பைபிள் அவரினால் தமிழிற்கு மொழி பெயர்க்கப் பட்டது. அவரின் வேட்கை ஒரு ஆங்கிலப் பாடசாலை சைவப் பிள்ளைகளுக்கென இருக்க வேண்டுமென இருந்தது. அதன் பயனாக யாழ் இந்துக்கல்லூரி உற்பவித்தது.
எமது கல்லூரியின் முகப்பு வாசகமாக ஒரு குறள் அமைய ஒரு காரணம் இருக்கலாம்.
பல நாடுகளுக்கு Written Constitutions எழுத்தில் அமைந்த யாப்புக்கள் இருக்கின்றன (அமெரிக்கா, கனடா, இந்தியா). வேறு சில நாடுகளுக்கு, முக்கியமாக இங்கிலாந்துக்கு written constitution , எழுத்திலான யாப்பு இல்லை. தமிழர்க்கான, தமிழ் இனத்திற்கான எழுத்திலுள்ள யாப்பு எதுவெனில் அது குறளாகவே இருக்க முடியும். அதனாற்தான் குறளை எமது முகப்பு வாசகமாக தெரிவு செய்திருக்கலாம்.'
எமது கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்ற புகழ் மிக்க பல்கலைக்கழகங்களில் கற்ற அதிபர்களையும்,ஆசிரியர்களையும் (திருவாளர்கள் வீ.எம்.ஆசைப்பிள்ளை, அ.வைத்திலிங்கம்), துறை போந்த தமிழ் ஆசான்களையும் (திருவாளர்கள்.சிவராமலிங்கம், வித்துவான் கார்த்திகேசு) கொண்டிருந்தது.மாணவர் கல்லூரிக்கும், கல்லூரி மாணவர்க்கும் புகழ் சேர்த்தனர்.
அத்தகு பெருமைமிக்க கல்லூரியொன்றில் கற்பதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் இன்று எம் தமிழர் பிரதேசத்தில் கல்வியின் நிலை என்ன? தமிழ் சிறார்களுக்கு உள்ள வசதிகள் என்ன? கற்பதற்கல்ல, வாழ்வதற்கே வகையென்ன? உரிமைகலென்ன? அதற்கான வகையினை, வசதிகளை நாம் செய்து கொடுத்தல் ஆகாதா? கல்வியில் தலை சிறந்து விளங்கிய யாழ்ப்பாணத்தில், தலை சிறந்த கல்விக்கூடத்தில் கல்வியினைப் பெற்ற நாம், அதே தகைமையை, வாழ்க்கைத்தரத்தினை எம் வழித்தோன்றல்களுக்கு எமது பிரதேசங்களில் ஏற்படுத்திக் கொடுத்தல் தலையாய கடமையாகும். இல்லையேல் நாம் கற்றதனால் ஆய பயன் என்?
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை'
(ஒருவனுக்கு அழியாத சிறப்புமிக்க செல்வம் கல்வியாகும்.அதனை ஒழித்த மணியும் பொன்னும் செல்வம் அல்ல)