போரினால் பெற்றோரை இழந்த மாணவருக்கு யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் உதவி வழங்க முன்வந்துள்ளனர்: உதயன் செய்தி
போரினால் பெற்றோரை இழந்த மாணவருக்கு யாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் உதவி
போரினால் பெற்றோரை இழந்து யாழ்ப் பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மாண வர்களுக்கான கற்றல் வசதிகளை வழங்க யாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் முன்வந்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் முதலில் 50 மாணவர்கள் பொறுப்பேற்கப்பட்டு அவர்களுக்கான விடுதிவசதி, உணவு வசதி கற்றலுக்குரிய ஏனைய அடிப்படை வசதிகள் என் பன செய்து கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான நிதியுதவியை வழங்க யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் முன்வந்துள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தினால் பெற்றோரை இழந்து எதிர்காலம் பற்றிய வெறுமைகளோடு இருக்கும் மாணவர்களுக்கு யாழ். இந்துவின் முன் மாதிரியான செயற்பாடு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Media Name: Uthayan News Paper, Jaffna
Published on: 2009-11-27





