JaffnaHindu.Org

Jaffna Hindu College

Thursday
May 17th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home Hindu Culture Rituals Aadi Amaa Vaasi - Fast for your Father

Aadi Amaa Vaasi - Fast for your Father

E-mail Print PDF

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.

சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.

 

Comments (0)

Write comment

smaller | bigger
security image
Write the displayed characters

busy
Last Updated ( Tuesday, 27 July 2010 01:31 )  

OBA International

 

Mr.S.Senthilnathan New President OBA UK

 

 

Mr.Pon.Balendran New President OBA Canada

 

Mr.P.Vivekanandha New President JHCA UK

 

 

Mr.K.Jeyakanthan New President OBA Sydney

 

 

Mr.S.Thavendran New President OBA Australia

 

Mr.R.Sivaranjan New President OBA Norway