
The auspicious time (புண்ணிய காலம்) of the day is from 7.33 AM to 3.33 PM and the auspicious colour is gold and green.
The time periods for exchanging money (கை விசேஷம்) are Thursday (14.04.2011) from 11.37AM to 12.02Noon, 12.14PM to 1.27 PM, 4.22 PM to 5.07 PM and on Friday (15.04.2011) from 8.00 AM to 9.47 AM and 9.57 AM to 10.28 AM. All the time are given according to Sri Lanka standard time.
On behalf of the Jaffna Hindu community, the Jaffna Hindu Web Team wishes the students, past and present teachers, old boys, their families and friends, a happy and prosperous new year.
Dress:Paddadai or Dress with Green Border
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சித்திரை மாதம் 1 ஆம் திகதி (14.04.2011) வியாழக்கிழமை காலை 11.33க்கு மிதுன லக்னம் மகர நட்சத்திரம் மூன்றாம் பாதம் பூர்வ பக்ஷ ஏகாதசி திதியில் கத வருடம் பிறக்கிறது.
விஷு புண்ணிய காலம்: வியாழக்கிழமை முற்பகல் 7.33 தொடக்கம் பிற்பகல் 3.33 வரையும் என்று வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இப்புண்ணிய காலத்தில் சிரசில் கடப்பமிலையும் காலில் கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பொன்னிற அல்லது பச்சை நிற ஆடை அணிந்து விநாயகர் வழிபாட்டுடன் இஷ்ட அல்லது குல தெய்வ வழிபாடு செய்து குரு ,பெற்றோர் மற்றும் பெரியோரை வணங்கி ஆசி பெறல் வேண்டும். மற்றும் தான தர்மம் செய்து பால் சோறும் தேனும் அருந்தி மகிழலாம்.
கை விசேஷம்: புது வருடம் பிறந்தவுடன் வியாழக்கிழமை காலை 11.37 முப தொடக்கம் 12.02 பிப வரை, 12.14பிப தொடக்கம் 1.27 பிப வரை, 4.22 பிப தொடக்கம் 5.07 பிப வரையும் அத்துடன் வெள்ளிக்கிழமை (15.04.2011) அன்ற 8.00முப தொடக்கம் 9.47 முப வரையும் 9.57 முப தொடக்கம் 10.28 முப வரையும். (யாவும் இலங்கை நேரப்படியே)
ஆடை: வெண்ணிற பட்டாடை அல்லது பச்சை கரை அமைந்த ஆடை
Comments (6)
New Year Wishes
Dr.V.Yoheswaran
Secretary, OBA JHC Jaffna
...
Wish you Happy Tamil New Year. May God bless You all !.
Varathakeyan
SYdney (OBA).
அனைத்து யாழ் இந்து சமூகத்தினருக்கும்
வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்
கு. பார்த்தீபன்






அனைவர்க்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்

சிறப்பான நற்செய்திகள் உன் வாழ்வில்
நிறைவாக நடந்திட என் நல்வாழ்த்துக்கள்
நல்லார் இணக்கமும் ஞானமும் கல்வியும்
நவின்றிடப் பெற்று நானிலம் சிறக்க
நீ வாழ்ந்திட என்றும் என் நல் வாழ்த்துக்கள்.
பொன்னும் பொருளும் போதும் என்றளவில்
இன்னும் இறையருள் இணைந்திடப்பெற்று
மண்ணில் நல மொடு வாழ என் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல எமது சிவஞான வைரவரின் பூரண நல்லாசியுடன் மலரும் இப்புத்தாண்டில் எமது இந்துத்தாய் மேலும் பல சாதனை நாட்டி இவ் வையகம் போற்ற ஒன்றிணைந்து செயற்படுவோம்
இந்துவின் மைந்தன்,
ச.கிருஷ்ண வத்சன்
2006 உயிரியல்.