
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையேயான தேசிய மட்டத் தடகளப் போட்டியில் வடக்கு மாகாணம் 17 பதக்கங்களைப் பெற்று 93 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டிகள் பியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் யாழ் இந்து கல்லூரியை சேர்ந்த V.ஜஸ்மினன் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் 6.74M பாய்ந்து 3ஆம் இடத்தினை பெற்றுகொண்டார். அத்துடன் தேசிய மட்டத்திலான வீரர்கள் தெரிவில் வடமாகாணத்தில் சிறந்த மெய்வல்லுனர் வீரராக V.ஜஸ்மினன் தெரிவுசெய்யப்பட்டது பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும். இவருக்கான பயிற்சியினை செ.ரமணனும், பயிற்சியினையும், பயிற்சி நெறிபடுத்தலினையும் மெய்வல்லுனர் பொறுப்பாசிரியர் K.சுவாமிநாதனும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரின் வெற்றிக்கு விளையாடுத்துறை பொறுப்பாசிரியர், அதிபர் ஆகியோர் பெரும்பங்காற்றி உள்ளமையும் குறிப்பிடதக்கது.
மாகாண ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த வீரர் வரிசையில் வடமாகாணத்தின் சிறந்த வீரனாக யாழ். இந்துக் கல்லூரி மாணவன் வி.ஜஸ்மினன் தெரிவானார்.இவருக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.ற்றைய பரிசளிப்பு நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
Reported by:T.Matheepan







