
Preparations for the kumbabishekam of our college temple, the Sivagnana Vairavar is gaining momentum. The School Administration and YMHA are jointly working on the kumbabishekam preparations. The last kumbabishekam was held in year 2000, and the next is scheduled to be in February, 2012. Donations and support are welcome from Jaffna Hindu Community around the world. Also, YMHA is preparing to release a kumbabishekam souvenir and hence, articles and write-ups are expected from old boys around the world.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமர்ந்து குலதெய்வமாக நின்று காத்து அருள் சுரக்கும் ஞானவைரவர்
எமது கல்லூரி வளாகத்தில் அமர்ந்து அருள் சுரக்கும் சொருபமாக நினைத்ததை நிறைவேற்றித்தரும் ஞானவடிவமாக எமது ஐம்புலன்களையும் அடக்கி அறியாமையை நீக்கி நல்லறிவு புலப்படுத்தி உலகெல்லாம் நிழலாக நின்று வளங்கொழிக்க வைத்து ஒப்பற்ற பலம் தந்து காத்து வருகின்றார். இத்தகைய அருள்பெருகும் ஞானவைரவருக்கு எமது கல்லூரி முன்னாள் அதிபர் P.S குமாரசாமி அவர்களாலும் மற்றும் பற்றும் பக்தியும் நிறைந்த பெரியோர்களும் அரும்பாடுபட்டு வைரவப்பெருமானுக்கு புதுப்பொலிவுடன் புதிய ஆலயம் அமைக்கப் பெரும்பங்காற்றி 1989ஆம் ஆண்டு முதன் முதலாக மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற சிவாகமத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் 2000ஆம் ஆண்டு இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நிறை வேற்றப்பெற்றது.
எனவே சிவாகம விதிப்படி 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியுள்ளதால் 2011ஆம் ஆண்டு ஆவணி மாதம் பாலஸ்தாபன அபிஷேகம் நடத்தி புனராவர்த்தனம் செய்து திருப்பணி வேலை நிறைவேற்ற திருவருள் கூடியுள்ளது. ஆலயத்திருப்பணி வேலைகளையும், மற்றும் திருத்த வேலைகளையும் சமயக்கிரியைகளையும் நிறைவேற்றி ஞானவைரவரின் திருவருள் பரவிப்பெருக, ஒவ்வொருவரும் நிதி அளித்து மென்மேலும் அருள் தழைத்தோங்கி திருவருள் பாலிக்க வழிசமைப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன். தங்கள் நிதியினை.
Commercial Bank, Jaffna, (S/A) A/C No. 8600924442 இல் “Yarlpanam Inthukaluri Sivaganana Vairavar” என்னும் வங்கிக்கணக்கிற்கு அல்லது National Savings Bank Jaffna (S/A) A/C No. 1-0006-02-7115-2 “Hindu Youth Society” எனும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.
திரு.வீ.கணேசராசா (அதிபர்)
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி








