
A grand welcome was given to the freshers who joined the college today. A ceremony known as 'கால் கோள் விழா' to welcome the new batch of students admitted to Grade 6 was held today (Wednesday, 17 January 2012) at the college.
யாழ் இந்துக் கல்லூரியில் இன்று தரம் 6 மாணவர்களை வரவேற்கும் ”கால்கோள்”நிகழ்வு இன்று கலை 9.00 மணியளவில் சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகின. ஆலய முன்றலில் இருந்து மாணவர்களும் பெற்றோர்களும் ஊர்வலமாக கல்லூரியின் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரதான வாயில் ஊடாக கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய திரு புண்ணியலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் நல்லை ஆதீன முதல்வரும், செஞ்சொற் செல்வரும் கலாநிதியுமான ஆறு.திருமுருகனும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். நல்லை ஆதீன முதல்வர் முதலில் ஆசியுரையினை வழங்கினார் .பின் பிரதம விருந்தினர் தனது உரையில் மாணவர்களின் கற்றலுக்கான அவசியத்தையும், இந்துக்கல்லூரியின் பெருமைகள் பாரம்பரியங்களைப் பற்றியும் அவற்றை மாணவர்கள் பேணிக் காப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.அதன்பின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.











