Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International UK

தீபராஜ் எனும் தீபம் அணைந்தது, இந்து சமூகம் இழந்தது அவரை
Posted on: 02/07/2015 (Thursday)
 
யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் (1992 A/L), யாழ்பாணம் இந்துக் கல்லூரி ஒன்றியம் பிரித்தானிய கிளையின் நிரந்தர அறங்காவலரும் ஆகிய திரு. வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்களின் மறைவு எமது ஒன்றியத்தை பெரும் துயருள் ஆழ்த்தியுள்ளது. 
 
பாடசாலை வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் நலனுக்குமாக 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது ஒன்றியத்தில் ஆயுட்கால அங்கத்தவராக தம்மை இணைத்துக் கொண்ட தீபராஜ் அவர்கள் பின்னர் அதன் நிர்வாகத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஒன்றியத்தின் செயலாளராகவும் பின்னர் அதன் நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றிய   தீபராஜ் எமது பாடசாலைக்கும், சமூகத்திற்கும் அளப்பரிய சேவையை வழங்கினார். 
 
கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஈடுபாடு கொண்ட தீபராஜ், எமது விளையாட்டு பிரிவான Jolly Star  நிர்வாக சபையின் முதுகெலும்பாக உழைத்தார். 2011ல், 13ம் வயதுக்குட்பட்டோர் பிரிவில், London  Harrow Hall பாடசாலைக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை கொழும்பு இந்துவின் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு படுத்தி தானே முன்னின்று நடத்தி, எமது பாடசாலை கிரிக்கெட் குழுவை உலக அரங்கத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
 
 
அத்துடன், வருடந்தோறும் நடைபெறும் Jolley Star கிரிக்கெட் போட்டியையும் Jolly Vibe Dinner Dance நிகழ்ச்சியையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடாத்திய பெருமையும் இவரையே சேரும். கொடுத்த வேலையை திறம்பட செய்வதிலும், அதனை முன்னின்று செய்வதிலும் இவரை விஞ்ச ஒருவருமே இல்லை எனலாம்.
 
2004 சுனாமி ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதியாக £10,000 கண்ணீர் துளி என்னும் நிறுவனத்திற்கு நாம் வழங்கியபோது, அவ் நிதி சேகரிப்பிலும், நிவாரண மருந்து கொள்வனவிலும் இவரின் பங்களிப்பு எண்ணிலடங்காதது. அத்துடன் எமது ஒன்றியம் 2010ம் ஆண்டிலிருந்து கடந்த 5 வருடங்களாக  போரினால் பாதிக்கப்பட்ட 18 மாணவச் செல்வங்களை  எமது பாடசாலையில் இணைத்து, அவர்களிற்கான சகல செலவுகளையும், பலரது உதவியுடன் செய்துவருகின்றது.  இவர்களில் தன்னையும் ஒருவராக இணைத்து திறம்பட செயலாற்றிய செயல் வீரன் தீபன்.
 
கல்லூரியின் தெற்கு வாயிலில், 125ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு அலங்கார வளைவு உருவாக்கப்பட்டபோது அதற்கு பாரிய நிதி அளித்தவர் தீபன். அத்துடன் 125ம் ஆண்டு நிறைவு விழாவில் நினைவுச் சின்னமாக வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கும் நாணயக் குற்றி உருவாக்கத்திலும் இவரது பங்கு அளப்பரியது.
 
எடுத்த காரியத்தை திறம்பட திட்டமிடலுடன் செயற்படுத்துதலில் தீபராஜ் ஒரு செயல் வீரன். புன்னகை தவழும் முகம், இன்சொல்லுடன் அரவணைத்து உபசரிப்பதில் அவரும், அவரது குடும்பமும் என்றும் முன்னிற்பார்கள். இவ்வாறான ஒரு அற்புதமான நண்பனை, உடன்பிறவா சகோதரனை, செயல் வீரனை எமது கழகம் இழந்து வாடி நிற்கின்றது.
 
எமது கழக அறங்காவலர் திரு.வ.தீபராஜ் மறைவை ஒட்டி கழகம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு எமது கழக அறங்காவலர்கள், நிர்வாகத்தினர்கள், ஆதரவாளர்கள் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்.அன்னாரின் இழப்பு எமக்கும் எமது சமுதாயத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். இறுதி வரை தன்னாலான சகல உதவிகளையும் தாயக உறவுகளுக்காக முன்னின்று உழைத்த உன்னத மனிதனை இழந்து நாம் வாடுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.
 
"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று" - திருவள்ளுவர்
 
இவ்வுலகில் இறந்தவர்களைக் கணக்கிட்டுக் கூறமுடியாது,அதுபோலவே துறந்தவர்களின் பெருமையை அளவிட்டுக் கூறமுடியாது.
 
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
 
அறங்காவலர்கள், நிர்வாகத்தினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
யாழ் இந்துக் கல்லூரி ஒன்றியம் பெரிய பிரித்தானியா.
அறங்காவல் பதிவு இலக்கம்- 1099893
 
Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube