Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Education

யாழ் இந்துவில் 5 ஆவது துறையாகிய தொழில் நுட்பதுறை ஆரம்பம்
Posted on: 15/07/2013 (Monday)

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் மாத்திரம் இன்றைய தினம் (15.07.2013) 5ஆவது துறையாகிய தொழில்நுட்ப துறையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் எமது கல்லூரியிலும் இத்துறையானது ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்களத்தின் தலைவர் திரு.வ.செல்வராஜா அவர்கள் கலந்து கொண்டார். அதே போன்று சிறப்பு விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டார். இதனை விட இந் நிகழ்விற்கு யாழ் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் திரு.யோகராஜன் அவர்களும், தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஏனைய பல கல்வியியலாளர்களும் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து விருந்தினர்கள் அனைவரும் குமாரசுவாமி மண்டபத்திற்கு பான்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதன் பின் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம் பெற்றது. அதன் பின் இன்றைய விழாவின் தலைவரும் கல்லூரி அதிபருமாகிய திரு.வீ.கணேசராஜா அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தியதுடன் இத் துறை தொடர்பான விளக்கங்களையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கினார். அதனை தொடர்ந்து இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர், அதே போன்று யாழ் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவரும் தமது உரைகளில் இத்துறை தொடர்பான போதிய விளக்கங்களை வழங்கினார்கள். இதன் பின்னர் மாணவர்களுக்கு இப் பாடத்துறை தொர்பான கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின் இன்றைய நிகழ்வின் முக்கிய நிகழ்வாகிய தொழில்நுட்ப பாடத்துறையின் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது. இதன் போது மாணவர்களுக்கு இப் பாட நெறி தொடர்பான வகுப்புக்களும் இடம் பெற்றது. இப் பாடங்களை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்களும் மற்றும் எமது கல்லூரி தொழில்நுட்ப ஆசிரியராகிய திரு. K.ரவிக்குமார் மற்றும் கணித ஆசிரியர் திரு.S.அகிலன் ஆகியோரும் கற்பித்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube