Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Tamil Day celebrated grandly,State Minister Hon.V.Radhakrishnan Chief Guest
Posted on: 04/07/2016 (Monday)

Jaffna Hindu Tamil Day 2016 celebrated grandly on 4th July 2016 at Cumarasamy Hall. The celebration was headed by Mas.Vishakanan, the head of the committee responsible for organizing the event. The State Minister of Education Hon.V.Radhakrishnan was the Chief Guest. The Tamil Day events started with pooja at Sivagnana Bhairavaperumal temple. From there, the chief guest and other distinguished invitees were taken on procession to Cumaraswamy Hall with the traditional percussion band and dance and acoompanied by scout's parade. At the hall, the events started with Tamil Vanakkam, lighting of lamp, prayers, Tamil Thai vaazhththu, and welcome address by the Senior Prefect T.Athavan. That was followed by addresses by Mas.Visakanan, the head of the organizing committee, Mr,Ragupathy, Teacher in Charge, Principal Mr.I.Thayanantharajah. Then, the Deputy Principal Mr.Satha Nimalan honoured the chief guest and the chief guest addressed the gathering. 

Following the formal speeches and honouring, prizes were distributed to winners of the competition conducted by the Tamil Sangam. Mr.Sivarajah, the senior most Tamil teacher of the school also was honoured at the event. Mas.Saravanan, Secretary of Tamil Sangam, delivered the vote thanks. The Tamil cultural events took stage thereafter.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்த் தின விழா நிகழ்வுகள் 04/07/2016 திங்கட்கிழமை கோலாகலமாக கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் விஷாகணன் தலைமையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களை பிரதம விருந்தினராகக் கொண்டு இடம்பெற்றது.
 
காலை 10.30 மணியளவில் சிவஞான வைரவப் பெருமாள் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.  விருந்தினர்கள் பண்பாட்டு பாரம்பரிய வாத்தியங்களுடனும் கலை நடனங்களுடனும் , கல்லூரி சாரணர்களின் அணிவகுப்பு மரியாதையுடனும் அழைத்துவரப்பட்டனர். கல்லூரி முன்றலில் அமைந்துள்ள நாவலர் பெருமானின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  தமிழ் வணக்கம், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் தாய் வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து கல்லூரியின் சிரேஷ்ட மாணவ முதல்வன் செல்வன் தெ. ஆதவன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. 
 
தொடர்ந்து, தலைவர் விஷாகணன் அவர்களினால் தலைமையுரையும் பொறுப்பாசிரியர் திரு. ரகுபதி அவர்களின் பொறுப்பாசிரியர் உரையும் இடம்பெற்றது.  தொடர்ந்து கல்லூரி முதல்வர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் உறையாற்றினார். பிரதம விருந்தினர் அவர்கள் கல்லூரி பிரதி அதிபர்.திரு.சதா நிமலன் அவர்களால் பொன்னாடை போர்த்தி, தமிழ் சங்க தலைவரினால் மாலை அணிவிக்கப்பட்டு, கல்லூரி அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
 
தொடர்ந்து காலை 11.20 மணியளவில் பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது.கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ வே. இராதகிருஷ்ணன் அவர்கள் தனது உரையில்,  மாகாத்மா காந்தி, விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற மாகான்கள் விஜயம் செய்த இந்த கல்லூரிக்கு தன்னையும் அழைத்தமைக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மற்றும் தமிழர்கள் கல்வி மற்றும் தொழில் தளங்களில் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றனர் என்றும் தமது அரசாங்கம் தமிழர் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் போதை வஸ்து பாவனை தடுகப்பட வேண்டியதொன்றென்றும் கருத்திட்டார்.  மற்றும் கல்லூரிக்கு  8 மில்லியன் பெறுமதியான கட்டிடம் விரைவில் அமைக்கப்படும் எனவும் கல்லூரிக்கான சுற்றுமதில் அமைத்துதருவதற்கும் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து  போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டது.
 
பின்னர், கல்லூரியின் மூத்த தமிழ் ஆசிரியர் திரு.சிவராஜா அவர்கள் கெளரவிக்கப்பட்டார். ஆசிரியர் அவர்கள் கல்லூரியின் தமிழ் வளர்ச்சிக்கு தனது பெரும்பங்களிப்பினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். கழக செயலர் செல்வன் சரவணன் அவர்களால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது, அதனைத்தொடர்ந்து பேச்சு, நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம் ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன..   அத்துடன் கல்லூரி கீதங்கள் 1.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
 
கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தமிழர் கலாச்சார உடையில் நிகழ்வில் பங்குகொண்டமை சிறப்புக்குரிய ஓர் விடயமாகும்.
 
இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து சஜீவன் மற்றும் மதீபன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube