Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

வட மாகாண 8 பாடசாலைகளுக்கு சிட்னி பழைய மாணவர் சங்கம் புத்தகங்கள் கையளிப்பு
Posted on: 04/12/2013 (Wednesday)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆஸ்திரேலியா, சிட்னி பழைய மாண்வர் சங்கத்தின் கல்வி எங்கள் மூலதனம் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாண பாடசாலைகளுக்கு நூலகங்களுக்கான நூல்களினை கையளிக்கும் வைபவம் இன்று கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து ஆரம்ப பாடசலை, கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலை, திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, கொக்குவில் ராம கிருஷ்ணா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கான நூல்கள் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழைய மாணவர் திரு.ஈ.சரவணபவான் அவர்களும், சிறப்பு விருந்தினராக  வடமாகாண சபையின் விவசாய அமைச்சர்  பழைய மாணவர் திரு.பொ.ங்கரநேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 
 
இந்த செயற்றிட்டம் ஆஸ்திரேலியா வாழ் இந்துவின் மைந்தர்களின் அயராத உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் வெற்றியளித்திருப்பதாகவும், சிட்னி பழைய மாணவர் சங்கத்தினர் எமது கல்லூரி  மட்டும்மல்லாது வடமாகாண பாடசாலைகளின் கல்வி நிலையினையினை உயர்த்தும் நோக்குடன் செயற்படுகின்றமை பெருமையான விடயம் என கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கெளரவ அமைச்சர் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் இது போன்ற ஆக்கத்திறன் மிக்க 
செயற்பாடுகள் மூலமே இழந்த எம் இனத்தின் சுவடுகளை மீளப் பெற்று நாம் கல்வியில் முன்னேற்றமடைய முடியும் என கருத்துதெரிவித்தார்.
 
ஒரு இனத்தின் அடையாளமாக கலாச்சார விழுமியங்கள் இருந்தாலும் அதனை உலகறிய செய்வது அந்த இனத்தின் திறமைகளே. குறிப்பாக கல்வியியல் திறமைகளே.அதனை வெளிப்படுத்துவது உயர்தரக்கல்வியும், பரீட்சைப்பெறுபேறுகளுமே.எனவே இவ்வாறான நூல்கள் கையளிப்பதன் மூலம் மாணவர்கள் பயன் பெறுவர் என்பதில் எந்த ஐயப்பாடும் கூறிவிடமுடியாது என்று தனது பிரதமவிருந்தினர் உரையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஈ.சரவணபவான் அவர்கள் தெரிவித்தார். மேலும் சிட்னி பழைய மாணவர் சங்கத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றும்  புலம்பெயர்ந்து வசித்து வந்தாலும் அவர்களின் சிந்தனை வடமாகாணக் கல்வியின் முன்னேற்றத்திலும் இந்து அன்னை பற்றியதாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். சிட்னி பழைய மாணவர் சங்க செயலாளர் குணரட்ணம் பார்த்தீபன் அவர்களின் இடையறா முயற்சிக்கு பலன் கிடைதிருப்பதாக தெரிவித்தார்.
 
அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கான நூல்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடந்து நூல்களினைப் பெற்றுக் கொண்ட பாடசாலைகள் சார்பில் கருத்து தெரிவித்த பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு.விஜயசுந்தரம் அவர்கள் பழைய மாணவர்களின் பாடசாலை கடந்த செயற்பாடுகளை வரவேற்றதுடன், யாழ் இந்துவின் பழைய மாணவர் சங்கங்களின் உதவிகள் மென்மேலும் யாழ் பாடசாலைகளுக்கு கிடைக்க பெற செய்யபடவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார். த.சுஜீவன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.இந்நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் என 350 மேற்பட்ட கல்வி சமூகத்தினர்  கலந்துகொண்டனர்.
 
இந்த செயற்திட்டம் சம்பந்தமாக ஆஸ்திரேலியா பழைய மாணவர் சங்கத்தினர் வட மாகாண அதிபர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம்
 
கல்வி எங்களின் மூலதனம் செயற்திட்டம் - ஆரம்பநிலை 2013

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம், சிட்னி அவுஸ்ரேலியா கடந்த பல வருடங்களாக தாயக மக்களுக்கு பல செயற்றிட்டங்களை செய்து வருகிறது. யாழ் இந்து கல்லூரிக்கு மட்டுமல்ல பிற தமிழ் பாடசாலைகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் சிட்னி பழைய மாணவர் சங்கம்  உதவி வருகின்றது. இந்த வகையில் இம்முறை தாயக தமிழ் பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டினை முதன்மையாகக் கொண்டு 'கல்வி எங்களின் மூலதனம்' என்ற குறிக்கோளுக்கு  இணங்க பல முன்னெடுப்புக்களை செய்து வருகிறது
 
'கல்வி எங்களின் மூலதனம்'

அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றை பல வழிகளில் பெறலாம் என்றாலும் வாசிப்பதால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் சந்தர்பங்களும்; உள்ளன. எவ்வளவு தூரம்  கணிப்பொறி வலையமைப்பு வளர்ச்சி பெற்றாலும் புத்தக அறிவு என்பது இன்னமும் இன்றியமையாததாக உள்ளது. அவுஸ்ரேலியா, லண்டன், கனடா போன்ற நாடுகளின் கல்வித் திட்டங்களை, பாடவிதான முறைகளை கவனமாக அவதானித்தும், சிறுவர் கல்வியின் முக்கியத்துவத்தினை முன்னிறுத்தியும், குறிப்பிட்ட ஆரம்ப பாடசாலைகளுக்கான நூல் நிலைய வளப்படுத்துதல் என்ற ஒரு திட்டத்தினை இவ்வாண்டு ஆரம்பித்துள்ளோம்.

உலக முற்றத்தில் தமிழர்களின் அடையாளங்கள் பல இருந்தாலும், முன்னிலை வகிப்பது கல்வியே. இதனை தாயக பாடசாலைகளிலிருந்து அறுவடை செய்வதற்கு நாம் வித்திடுதல் அவசியமாகும். அதாவது எமது தமிழ் குழந்தைகளிற்கு ஒரு அத்திவாரமாக ஆழமான ஆரம்ப கல்வியை பெற்றுக்கொடுப்பது எமது தலையாய கடமையாகும். இதனை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சிந்தையில் நிறுத்தி, அதனை தலையாய கடமையாக எடுத்து செயற்படுத்துதல்; வேண்டும்.
 
வாசிப்பு பழக்கம்

எமது மதிப்புக்குரிய அதிபர், ஆசிரியர்களே, மாணவ குழந்தைகளிற்கு வாசிப்புப்பழக்கத்தினை ஒரு அடிப்படைப் பழக்கமாக ஏற்படுத்துவதற்கு,  மாற்றுவதற்கு உங்களாலான நடவடிக்கைகளை எடுங்கள். இதனை ஊக்குவிப்பதற்கு போட்டிகளை நடாத்துங்கள், பரிசில்களை கொடுங்கள். நாமும் எம்மாலான உதவிகளை செய்வதற்கு முன் நிற்கின்றோம். இதன் அடிப்படையில்,  யாழ் இந்து சிட்னி பழைய மாணவர் சங்கத்தினராகிய நாங்கள் உங்கள் பாடசாலை நூல் நிலையத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்கின்றோம் இதனை அனைத்து மாணவர்களும் பயன்பெறுமாறு உங்கள் நூல் நிலையத்தில் பேணி பாதுகாத்து கல்வி வளத்தினை பெருக்கிடுவீர்.
 
அத்துடன், பல்கலைக்கழக அனுமதியில் எமது மாற்றம் குறிப்பாக வீழ்ச்சியினை ஆராய்ந்து, அதனை எமது இவ்வாண்டு மலரிலே பிரசுரித்திருக்கின்றோம். அதன் பிரதியினையும் இத்துடன் சேர்த்துள்ளேன்.

ஒரு இனத்தின் அடையாளமாக கலாச்சார விழுமியங்கள் இருந்தாலும் அதனை உலகறிய செய்வது அந்த இனத்தின் திறமைகளே. குறிப்பாக கல்வியியல் திறமைகளே.அதனை வெளிப்படுத்துவது உயர்தரக்கல்வியும், பரீட்சைப்பெறுபேறுகளுமே. இவை ஆரம்பிக்கும் இடம் உங்கள் கோவில்களாகிய பாடசாலைகளே. இதனை நாம் மையப்படுத்தும் அதேவேளை, மாணவர்கள் அந்த நிலையை அடைவதற்கு அத்திவாரமாவும், ஆணிவேராகவும் இருப்பது ஆரம்ப கல்வி என்பதனை மறந்துவிடக்கூடாது. அறிவுத்திறன்;, ஆற்றல், மூளைவளர்ச்சி, சிந்தனைத்திறன் உதிக்கும் காலம் ஆரம்ப பாடசாலை நாட்களே. இந்த செய்தியினை நாம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் எடுத்துரைத்து ஒரு வளமான தமிழ் சமுதாயம் உதயமாவதற்கு  அரும்பாடுபடுவோமாக.

'கல்வி எங்களின் மூலதனம்  - வாழ்க  தமிழ் வளர்க தமிழர் கல்வி'
 
செயலாளர்
யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்
சிட்னி - அவுஸ்ரேலியா
4/12/2013
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube