Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Successful forest based Hinduboree - A milestone in the centenary of Jaffna Hindu Scouts
Posted on: 04/10/2016 (Tuesday)
The Jaffna Hindu College Scout Troop celebrated their centennial year in a grandeur way with a massive forest based centenary camporee named “Hinduboree” from 7th - 11th September 2016 in the Vavunikulam Maruthankadu, in the Mullaitivu district. The Hinduboree was a grand success and will remain as another milestone in the history of Jaffna Hindu College Scouts. The centenary celebrations of the scout troop that started with Pongal festival and continued with blood donation camp, documentary exhibition, Aadi kool cultural event, Scout walk, field day activities, and many other community services will end with centenary souvenir release.
 
வனப்பகுதியில் சிறப்புற நடைபெற்ற "இந்துபோறி" - யாழ் இந்து சாரணியத்தின் நூற்றாண்டு மைல்கல்
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் நூற்றாண்டினை முன்னிட்ட கம்போறி "இந்துபோறி" வெகுவிமர்சையாக வவுனிக்குளம் மருதங்காட்டு பகுதியில் செப்டெம்பர் 7 முதல் 11 வரையான காலப்பகுதியில் சிறப்புற நடைபெற்றது. 4வது யாழ்ப்பானம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவானது 1916ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தேசிய ரீதியாக தனித்துவமான சாரணர் குழுவாக திகழ்ந்துவருகின்றது. நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி சாரணர்களாலும், பழைய சாரணர்களாலுல் பல்வேறு பட்ட சிறப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நூற்றாண்டு பொங்கலுடன் ஆரம்பித்த நிகழ்வுகள், இரத்தான முகாம், ஆவணக் கண்காட்சி, ஆடிக்கூழ் கலாச்சார நிகழ்வு, மற்றும் பல சமூக சேவைச் செயற்றிட்டங்களுடன் தொடர்ந்து இறுதியாக சாரணர் நடைபவனி, வெளிக்கள நாள் செயற்பாடுகள், நூற்றாண்டு மலர் வெளியீட்டுடன் நிறைவுபெறும். இந்து சாரணியத்தின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் யாழ் இந்துவின் பழைய சாரணர்களின் - யாழ் இந்து திரிசாரணர் குழுமம் ஒழுங்கமைத்த இந்துபோறியானது சிறப்பான இடத்தைப்பெறுகின்றது.
 
"இந்துபோறி" - வனக் கம்போறி நிகழ்வானது செப்டெம்பர் 7 தொடக்கம் 11 வரையான காலப்பகுதியில் மல்லாவி வவுனிக்குளக் கரையில் அமைந்துள்ள மருந்தங்காட்டுப் பிரதேசத்தில் நடைபெற்றது. இக் கம்போறியானது யாழ் இந்து சாரணியத்தின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் முகமாகவும், வனப் பிரதேசத்தில் சாரணர்களுக்கு சிறந்த அனுபவத்தினை உருவாக்கும் முகமாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சாரணிய செயற்பாடுகளை புத்துயிர் பெறச்செய்யும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இக்கம்போறியில் வடமாகாணத்தைச் சேர்ந்த சாரணர்கள் பங்குகொண்டு பயன்பெற்றனர். மல்லாவி நகர் பிரதேசத்திலிருந்து சுமார் 12கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி கம்போறி நிகழ்வினை சிறப்புற நடாத்தி முடித்தமை - யாழ் இந்து சாரணியத்தில் பெற்றுக்கொண்ட ஆழுமைகளிலிருந்துதான்.
 
 
செப்டெம்பர் 7 புதன்கிழமை
 
சாரணர்களுக்கான பாசறைப் பகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான கூடாரங்கள் அமைக்கும் செயற்றிட்டங்களில் ஈடுபட்டனர். வழமைக்கு மாறாக வனப்பகுதியில் பாசறைப்பகுதி அமைந்திருந்தமையினால் அனைவரினதும் முகங்களிலும் இனம்புரியாத பதற்றத்துடன் கூடிய மன நிலையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தத்து.
 
மாலை 4.30 மணிக்கு இந்துபோறி கொடி ஏற்றும் நிகழ்வு வவுனிக்குளக் கரையில் அமைத்துள்ள பிரதான ஒன்றுகூடல் திடலில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூ.கேதீஸ்வரன் அவர்கள் அதிதியாகக் கலந்துசிறப்பித்தார். முல்லைத்தீவு மாவட்டக் கொடியினை அரச அதிபரும், யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் நூற்றாண்டுக் கொடியினை துருப்புத் தலைவர் செல்வன் பார்த்தீபன் கஜேந்திரன் அவர்களும், இந்துபோறிக் கொடியினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபரும் இந்துபோறி கெளரவ பிரதானியுமாகிய திரு.ஐ.தயானந்தராஜா அவர்களும் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய முல்லை மாவட்ட அரச அதிபர் அவர்கள், தனது மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இந்நிகழ்வினை நாடாத்துவதில் மகிழ்ச்சியினை தெரிவித்ததுடன், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவு என்றுமே இருக்கும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் திரு.ரமேஸ் அவர்களும் விருந்தினராகக் கலந்துசிறப்பித்தார்.
 
செப்டெம்பர் 8 வியாழக்கிழமை
 
சாரணர்களுக்கான திறமைகாண் செயற்பாடுகள் ஆரம்பமாகின. இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு இலங்கை சாரணர் சங்க பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் கலந்து பாசறைப்பகுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். கொடியேற்றல் நிகழ்வுகளைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.
 
சாரணர் செயற்பாடுகளில் அனைவரும் ஆர்வமாகப் பங்குகொண்டனர். துணிகரமாக சவால்களை எதிர்கொள்ளும் - இரண்டு கயிற்றில் நடத்தல், ஒற்றைக் கயிற்றில் பயணித்தல், தடைதாண்டுதல், கங்காரு பாய்ச்சல், டொல்பின் நடை, ரயரினூடான பாம்புப் பயணம், தடைகளினூடாக ஊர்ந்துசெல்லுதல், மரம் ஏறுதல்  போன்ற துணிகரச் செயற்பாடுகளில் சாரணர்கள் ஆர்வமாகச் செயற்பட்டனர். அத்துடன் நினைவுத் திறனினை பரிசோதிக்கும் நினைவு விளையாட்டு, இலக்கினை குறிபார்த்து அடித்தல், புகைப்படம் பிடித்தல், கணினி உதிரிப்பாகங்களை பொருத்துதல், ஆற்றுக் களி மண் எடுத்து சிற்பம் செய்தல் போன்ற பல்திறன்களை பரிசோதிக்கும்  நடவடிக்கைகளும் இடம்பெற்றன. வழமையான ஜம்போறிகளிலிருந்து இந்த செயற்பாடுகள் மாறுபட்டிருந்தமையுடன் இயற்கையான வனச்சுழலில் அமைந்திருந்தமை சாரணர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
 
இரவு கலாச்சார நிகழ்விற்கான ஒத்திகை தீப்பாசறை நிகழ்வானது நடைபெற்றது.
 
செப்டெம்பர் 9 வெள்ளிக்கிழமை
 
தொடர்சியான சாரணர் செயற்பாடுகளில் சாரணர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.  வனப்பாசறையில் முக்கிய அம்சமாகிய நடைபயணம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. வனவியல் குறியீடுகளினூடாக காட்டினூடாக அணி முறைமையிலான நடைபயணம்  வழி நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் கொண்டமைந்த இந்த நடைபயணத்தில் காட்டினை இணங்காணல், சுவடுகளை அறிதல், திசைகாட்டியின் பயன்பாடு,   மரங்களின் தன்மைகளை இனங்காணல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த நடை பயணமானது சாரணர்களுக்கு அணி முறைமையின் முக்கியத்துவத்தினையும், அவதானிப்பின் வேண்டுதலையும் கற்றுத்தந்தது.
 
இந்துபோறியின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் திரிசாரணர்   திரு.  சின்னத்துரை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும், வடமாகாண ஆளுனர் செயலாளருமாகிய திரு.இளங்கோவன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். பிரதம விருந்தினர் அவர்கள் தனது உரையில், இந்த இந்துபோறியினை இவ்வாறன வனப்பகுதியில் மேற்கொண்டு சாரணர்களுக்கு சிறந்த அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தமையினையிட்டு பெருமை கொள்வதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சாரணியத்தினை புத்துயிர் பெறச்செய்யும் நடவடிக்கைகளுக்கு, யாழ் இந்து திரிசாரணர் குழு ஊடாக அனைத்து ஆதரவினையும் வழங்குவதற்கு உறுதியளித்தார். பிரதம விருந்தினர் அவர்களுக்கான நினைவுப் பரிசினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் வழங்கிக்கெளரவித்தார். இந் நிகழ்வில் கல்லூரி உப அதிபர் திரு சதா நிமலன், முன்னாள் குழுச் சாரணத் தலைவர் திரு.பொ.சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து பாண்டியன் குளப் பிரதேசத்தினைச் சேர்ந்த இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச மக்களும் ஆர்வத்துடன் கலந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
 
 
செப்டெம்பர் 10 சனிக்கிழமை
 
சாரணர்கள் இறுதி நாள் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாகக் காணப்பட்டனர். அத்துடன் அனைத்து சாரணர்களுக்குமான படகோட்டல் பயிற்சியும் வழங்கப்பட்டது. முழுமையாக நகர்புற பாடசாலைகளை சேர்ந்த சாரணர்களுக்கு அனைத்துமே புதிய அனுபவமாக அவர்களின் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக நிலைபெற்றது. 
 
இந்துபோறி நிகழ்வின் இறுதி நிகழ்வுகள்  ஒருங்கமைப்புக் குழுத் தலைவர் திரு,ந.நவசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுகள் யாவும் திரிசாரணர் திரு அச்சுதன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின.  இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண கல்வி அமைச்சர் கெளரவ தம்பிராசா குருகுலராசா அவர்களும், விவசாய அமைச்சர் கெளரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். திரிசாரணர் திரு,கோ.சத்தியன் அவர்கள் யாழ் இந்து திரிசாரணர்களின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உரையாற்றினார். தொடர்ந்து
 
யாழ் இந்து திரிசாரணத் தலைவர் திரு.மு.ஜோதீஸ்வரன் அவர்கள் இந்துபோறி தொடர்பான விளக்கவுரையாற்றினார். 
 
இந் நிகழ்வில் உரை நிகழ்த்திய  கல்வி அமைச்சர் கெளரவ த.குருகுலராசா அவர்கள், சாரணர்கள் எப்பொழுதுமே ஒரு நின்மதியான வாழ்க்கை முறைமையினை கொண்டிருப்பதாகவும், வாழ்வில் சாதிப்பதற்கு சான்றாக இந்துபோறி நிகழ்வு எடுத்துக்காட்டாக அமைவதாகவும், இவ்வாறான பாசறையினை ஒழுங்கமைத்த யாழ் இந்து திரிசாரணர் குழுவிற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் வருடாந்தம் இவ்வாறான பாசறையினை இந்தப் பகுதியில் அமைத்து வடமாகாணத்தில் சாரணியம் புத்துயிர் பெற தன்னுடைய ஆதரவுகள் கிடைக்கபெறும் எனவும் தெரிவித்தார்.
 
இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர் கெளரவ பொ.ஐங்கரநேசன் அவர்கள்,
 
இந்துக்கல்லூரியின் திரிசாரணர் குழு இந்துபோறியை நடாத்துவதற்கு மிகப் பொருத்தமான இடத்தையே தேர்வு செய்திருக்கிறது. ஒரு பக்கம் பரந்து விரிந்து கிடக்கும் வவுனிக்குளமும் மறுபக்கம் நெடிதுயர்ந்து அடர்ந்து நிற்கும் மருதமரங்களும் இங்கு கூடியிருக்கும் சாரணர்களை நிச்சயமாக ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் சென்றிருக்கும். இயற்கை பற்றிய இரசனை இல்லாதவர்களைக்கூட இயற்கையின் பேரழகைப் பருகவைத்து, இயற்கையை நேசிக்கக் கற்றுத்தந்திருக்கும்.
 
அதிகாலை குளக்கரையில்; படுத்திருக்கும் முதலைகளையும், சேற்றில் பதிந்துள்ள யானைகளின் பாதச் சுவடுகளையும், குரங்குகளையும், நரிகளையும் பலமாணவர்கள் முதற்தடவையாக இங்கு பார்த்திருக்கக்கூடும். இயற்கைச் சூழல் இதுவரையில் நீங்கள் கண்டிராத உயிரினங்களைத் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பை மாத்திரம் உங்களுக்கு வழங்கவில்லை. இயற்கை, மன அழுத்தங்களில் இருந்து எங்களை விடுவித்து மனதைச் சாந்திப்படுத்தவும், மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இது மனதில் தீய எண்ணங்கள் குடியேறாது, நேர்வழிச் சிந்தனையை விதைக்க வழிகோலுகிறது.
 
மொத்தத்தில், இயற்கை என்ற பேராசான் மாணவர்களை நன் மானிடர்களாக வளர்த்தெடுப்பதற்கு ஏராளமான விடயங்களைக் கற்றுத்தரும். அந்த வகையில் மாணவர்கள் எல்லோரும் சாரணர்களாக இணைந்து கொள்வதும், இது போன்ற வனப்பாசறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
விருந்தினர்களால் பங்குகொண்ட சாரணர்களுக்கான சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அத்துடன் அலுவலர்களாகக் கடமையாற்றியவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
 
இந் நிகழ்ச்சியில் பரியோவான் கல்லூரி அதிபர் திரு.என்.ஞானப்பொன்ராஜா, கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் திரு,விக்னராஜா, யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் திரு.செ.தேவரஞ்சன், யாழ் இந்து பழைய மாணவர் சங்க உபதலைவர் திரு இராசநாயகம் , முன்னாள் சாரணிய ஆசிரியர் திரு.பொ.சிறீஸ்கந்தராஜா, யாழ் இந்து சாரணிய ஆசிரியர் திரு.க.சுவாமிநாதன் ஆகியோர் விருந்தினராகக் கலந்துசிறப்பித்தனர். நிகழ்வுகள் யாவும் இந்துபோறி செயலாளர் திரு.த.சுஜீவன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து யாழ்ப்பாணம் பூவன் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.  
 
11 செப்டெம்பர் - ஞாயிற்றுக் கிழமை
 
இந்துபோறி கொடியானது உத்தியோகபூர்வமாக இறக்கப்பட்டது.  சாரணர்கள் அனைவரும் தம் வாழ்வில் புதிய அனுபவத்தினை பெற்ற மகிழ்வுடன், இந்துபோறியினை முழுமையாக அனுபவித்த திருப்தியுடனும், இயற்கை சூழலினை விட்டுப்பிரிய மனமின்றி தமது இந்துபோறி நினைவலைகளுடன் தங்கள் பிரதேசங்கள் நோக்கிப் பயணமாகினர்.
 
மல்லாவி மத்திய கல்லூரி, யோகபுரம் மாகாவித்தியாலயம், பாண்டியன் குளம் மாகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இந்துபோறியினூடாக சாரணிய நடடிக்கைகளுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். தொடர்சியாக அந்த பாடசாலைகளில் சாரணிய செயற்பாடுகளை முன்னெடுக்க யாழ் இந்து திரிசாரணர் குழு நடடிக்கைகளை மேற்கொள்ளும். மற்றும் மல்லாவி பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த பெண் சாரணர்கள் பகல் வேளையில் பாசறைப் பகுதிக்கு வருகை தந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  பங்குபற்றிய சாரணர் குழுக்கள் தங்களுக்கான உணவுகளை தாமே சமைத்து உண்டனர்.
 
"இந்துபோறி" - நூற்றாண்டு சாரணர் கம்போறியானது சிறப்பான முறையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குரிய தனித்துவத்துடன் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கான நிதிப்பங்களிப்பினை யாழ் இந்து  திரிசாரணர்கள் வழங்கியிருந்தனர்.இந்துவின் இணையத்திற்காக வன்னியில் இருந்து தர்மரட்ணம் சுஜீவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube