Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Sri Lanka

Seventy Five in Hundred and Twenty Five: Jaffna OBA honours old boys aged 75 and above
Posted on: 07/02/2016 (Sunday)
Jaffna OBA arranged a special event named “Seventy Five in Hundred and Twenty Five” to honour all the old boys who are aged 75 or above. This was held last Sunday, 7th February 2016, at the College’s Sabalingam Auditorium. Dr.K.Nanthakumaran graced the event as the Chief Guest.  Fifteen old boys were honoured at the event. An identity card for members of the Jaffna OBA also was introduced there.
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி  பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ் இந்துவின் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த பழைய மாணவர்களை கெளரவிக்கும் "நூற்றியிருபத்தைந்தில் எழுபத்தைந்து" நிகழ்வு 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரி சபாலிங்கம் அரங்கில் மாலை 3.00 மணிமுதல் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். ஆசியுரையினை சுவாமி ஜாக்கிரத சைத்தன்யா அவர்கள் வழங்கினார்,
 
அதனைத் தொடர்ந்து யாழ் இந்துவின் 75 வயதிற்கு மேற்பட்ட மூத்த பழைய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பழைய மாணவர்களின் நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றமை சிறப்பிற்குரிய விடயமாகும். இந் நிகழ்வில் 15 இந்துவின் மூத்த பழைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்,
 
அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினரால் தேசிய இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
 
யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினரின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் அடையாள அட்டையை வெளியிட்டு வைக்க மூத்த பழைய மாணவனும் கல்லூரியின் முன்னாள் அதிபருமான திரு.அ.பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அத்துடன் முதற்கட்டமாக பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
 
கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் மாலை 6.30 மணியளவில் இனிதே நிறைவுற்றன. - இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து சுஜீவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube