Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Australasia

கவிஞர்.சா.வே.பஞ்சாட்சரம் அவர்களுக்கு இந்துவின் மகுடம் பட்டம் வழங்கி கௌரவிப்பு
Posted on: 07/12/2013 (Saturday)

யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னி கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று ஹோம்புஷ் உயர்தர பாடசாலையில் நடைபெற்றது. அங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் இந்து மண்ணின் பெருமையை வியந்து பாராட்டினர்.இந்த பொதுகூட்டத்தில் புதிய நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டது.எதிர்வரும் ஆண்டிற்கான தலைவராக திரு.சிவகுமாரன் தெரிவு செய்யப்பட்டார்.செயற்குழு முழு விபரத்தினை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

இந்த விழாவில் கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில் தான் இந்து கல்லூரியில் கல்விகற்காவிட்டலும் தானும் இந்துவின் பழைய மாணவன் என்று ஒரு செய்தியை விட்டுசென்றார். இவரிற்கு சிட்னி பழைய மாணவர் சங்கம் இந்துவின் மகுடம் என்ற ஒரு கௌரவ விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் வரலாறு - இந்துவின் மகுடம்

இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ பிரகாச வித்தியாசாலையில் கற்று யாழ் பரமேஸ்வரா கல்லூரியில் உயர் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். 1964ம் ஆண்டு ஜூலை 15 இல் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று நவக்கிரி அ. மி. த. கலவன் பாடசாலையில் பணிபுரிந்து வந்தார்.  1966/67 களில் நல்லூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழ் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்து 1968ம் ஆண்டு கண்டி புசல்லாவ பரி. திரித்துவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் நியமனம் பெற்றார். 1974 -1984 வரை இணுவில் சைவ பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்பித்த இவர் 1985ம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். 1985 - 1995 வரை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய பின்னர் 1999 வரை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கடமையாற்றி ஒய்வு பெற்றார்.


தமிழ் வாழ்வு / படைப்புகள்

கவிதை, சிறு கதை, நாவல்கள், சின்னஞ் சிறு கதைகள், குட்டிக் கதைகள், உருவகக் கதைகள், வரலாறு, இலக்கணம், குறுங்காவியங்கள் என 90க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 15,000க்கும் மேற்பட்ட கவிதைகள்,  40 ஊஞ்சல் பாட்டுக்கள்  எழுதியுள்ளார்.

மற்றும் திருவிரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலைகள், தல புராணங்கள், தூதுகள், கண்ணன் கவசம், விடுதலை கீதங்கள் என இவரின் படைப்புகள் தொடர்ந்து செல்கின்றன.

இந்து சாசனம், கலைச் செல்வி பத்திரிகை போன்றவற்றிற்கு உதவி ஆசிரியராகவும், தற்போது கனடாவில் உங்கள் நண்பன் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

இவருடைய காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் 40 இற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார்.


இவருடைய சேவையை பாராட்டியும், தமிழ் துறைக்கான இவரின் பங்களிப்பினை மெச்சியும், யாழ் இந்து அன்னையின் புகழை கவிதைகள், பாடல்களாக உலகிற்கு எடுத்துரைத்ததினை கருத்தில் கொண்டும், இந்துவின் மைந்தர்களுக்கு மொழி, எழுத்து ஆற்றலை வளர்த்ததினையும் பாராட்டி யாழ் இந்து சிட்னி பழைய மாணவர் சங்கம் அதன் அதியுயர்  விருதான "இந்துவின் மகுடம்" என்ற உயர் விருதினை வழங்கி ஆசிரியர், கவிஞர், சா.வே. பஞ்சாட்சரம் அவர்களை கெளரவிக்கின்றது.

வாழிய யாழ் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்.

சிட்னி பழைய மாணவர் சங்கம்
ஆஸ்திரேலியா
7 மார்கழி 2013


 

Recent Posts
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
 Hindu Circle   
Maha Sivarathri on Friday 24 Feb 2017
 College   
Workshop on Rights to Information Act; Dr.V.Yoheswaran Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube