Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Poems

நாவன்மை - நினைவுகளை மீட்கும் நவராத்திரி ஒரு கவிதை
Posted on: 30/07/2013 (Tuesday)

நவராத்திரி என்றால் நமக்கெல்லாம் நாவினிக்கும்
அவலோடு சர்க்கரை நெய் சேர்ந்து நாவில் நீர் சுரக்கும்
மலரெல்லாம் சேர்த்து மாலை ஒன்று தொடுத்துவைத்து
எண்ணை  களிம்பகற்றி ஏழு திரி விளக்கு வைத்து
எல்லாரும் சேர்த்து செய்யும் எம்பூசை முறையும் வரும்

முதற் பூசை நடக்க மூன்று நான்கு நாள் முன்னே
சுற்றறிக்கை ஒன்று வரும், சுவரொட்டி பல இருக்கும்
அறிவித்தல் பலகையிலும் அறிவித்தல் போட்டிருக்கும்
கீழ் மேல் மத்தி என்று மூன்றாக பிரித்துவைத்து
நாவன்மை போட்டி நமக்கெல்லாம் அதில்போட்டி

கீழுக்கும் மத்திக்கும் முன்னாலே தலைப்புவரும்
மேலுக்கு போனபின்னர் அப்போதான் தெரியவரும்
யார் யாரோ எழுதியதை மூச்சிறைக்க பாடமாக்கி
ஏத்திறது அங்க இறக்கிறது இங்க இழுக்கிறது எங்க
அங்க இங்க கைதூக்கி ஒத்திகையும் நடந்திருக்கும்

காற்சட்டை மீது சால்வை ஒன்று சுற்றிவிட
வேட்டி  என்றதற்கு விளக்கமொன்று வாய்த்துவிடும்
போட்டி என்றால் அப்போதும் முன்னால் என் பெயரிருக்கும்
பெயர் ஒழுங்கில் எப்போதும் பின்னால் என் பெயரிருக்கும்
கடைசிவரை காத்திருந்து வாய்பார்க்கும் வாய்ப்பிருக்கும்

காத்திருந்து கடைசியிலே எனக்கும் பேசிவிட நேரம் வரும்
முகம் விறைப்பாக இருந்தாலும் வேட்டிக்குள் கால் நடுங்கும்
வாணி புகழ் தன்னை வணக்கம் சொல்லி வாயுரைக்கும்
நடுவர் தான் சுவைக்கும் வடை வாசம் வந்தெனக்கு வாயூறும்
மனதினிலே ஏற்றிவைத்த வார்த்தையெல்லாம் தடுமாறும்

போட்டியெல்லாம் முடிய மீண்டுமொரு காத்திருப்பு
முடிவுவரும் வரைக்கும் ஒருநூறு எதிர்பார்ப்பு
முன்னாலே பேசியவன் பின்னாலே பேசியவன்
எல்லாமும் சீர்தூக்கி எனக்குள் ஒரு ஒப்பீடு
எனக்குமொரு இடம் வேண்டும் இறைவனிடம் வழிபாடு

இதயம் படபடக்க இறுதியிலே முடிவு வரும்
இறுதியில் யாருக்கு பதக்கம் என்ற சேதிவரும்
முன்னாலும் வேண்டாம் பின்னாலும் வேண்டாம்
நடுவில் ஒரு இடம் வேண்டும் நம் மனது நாடி நிற்கும்
நடுவர் நாவோ வேறுரைக்கும் நம் கனவை வேரறுக்கும்

ஆழ்மனதில் அலையடிக்கும் அழுதழுது கண் சிவக்கும்
ஏன் இனி நான் பேசி என்று எனக்குள் ஒரு கேள்வி வரும்
சோர்ந்து உயிர் பரிதவிக்க பாரதியின் நினைவுவரும்
மேற்பிரிவு வருகையிலே தடை மேவி விடும் உறுதி வரும்
நம்பிக்கை துளிர்க்க நாவினிலே தமிழ் நடக்கும்

தலைப்பறிய வாய்ப்பில்லை தமிழ் அறிந்தால் வாய்ப்பிருக்கும்
தத்துவங்கள் சேர்ந்து தலைப்பொன்று காத்திருக்கும்
மனனத்து மன்னவரின் மாட்சி இப்போ மழுங்கிவிடும்
தான் உணர்ந்து சொல்லும் தனி உரையே துணையிருக்கும்
தேடலிலே   கண்டெடுத்த தேன் துகள்கள் துணையிருக்கும்

பள்ளியிலே கற்பித்த பாடமெலாம் தள்ளிவைத்து
நாம் பார்த்தறிந்து சுவைத்த பாரதியின் பாட்டெடுத்து
சிந்தையிலே வந்துவிழும் செந்தமிழின் சொல் தொடுத்து
தஞ்சமென்று பரம்பொருளை நெஞ்சினிலே தொழுது எழுந்து
நின்ற நிலை தளராமல் நிமிர்ந்து உரை அரங்கேறும்

குரல் அசைவும் மொழிநடையும் கூடிவர பேச்சுவரும்
அருவியென தமிழ் பொழிய அவையினரின் விழி விரியும்
அடுத்த வரி என்ன என்று அப்போது மனம் நினைக்கும்
இடையிடையே சுவை சேர்க்க பாரதியின் பாட்டுவரும்
சுவை சேர்த்து சொல்லி வைக்க நேரமது நிறைந்திருக்கும்

எத்தனையோ மேடைகளில் ஏறி இறங்கிடினும்
அத்தனைக்கும் முதற்புள்ளி அந்த புகழ் மண்டபம்தான்
அகிம்சையோடு அத்வைத தத்துவங்கள் எதிரொலித்த
ஆழ்ந்தகன்ற தூண்களுக்குள் அகப்பட்ட நினைவுகள்தான்
நள்ளிருளில் நடராஜர் நடம்புரியும் திருத்தலந்தான்

நாதியற்று நானலைந்த வேளையிலே நாவில் வந்து நல்ல தமிழ் சேர்த்து
என்னை நானறிய செய்த நாமகளின் திருவருளே நாவன்மை
அவனியிலே எந்தன் ஆவி உழலும்வரை அருகிருக்க வேண்டுகிறேன்
இயற் தமிழே உன்னை இணைபிரியா வரம் கேட்டேன்
இறுதிவரை நீ இருக்க இறையவனை இறைஞ்சி நிற்பேன்

கேதாரசர்மா லட்சுமணசர்மா - உயர்தரம் 2003 (பழைய மாணவன்)

Recent Posts
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
 Hindu Circle   
Maha Sivarathri on Friday 24 Feb 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube