Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Sri Lanka

சிறப்பாக இடம் பெற்ற இந்துவின் முத்தமிழ் மாலை 2015
Posted on: 11/07/2015 (Saturday)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், கல்லூரி அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி திரட்டும் வகையிலான கலை நிகழ்வு  "இந்துவின் முத்தமிழ் மாலை", 11/07/2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கோபிதாசின் வயலின் இசை,பிரியதர்ஸினி வாகீசனின் நெறியாள்கையில் நர்த்தன ஷேத்திராவின் நிருத்திய அர்ப்பணம் நடன நிகழ்வு,ஜோன் கலிஸ்ரனின் ஒரு கூத்தனின் குறிப்பேடு தனிநடிப்பு,ஆகிய நிகழ்வுகள் நலைபெற்றன.மிகவும் நேர்த்தியான முறையிலும் அதிகமான தரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றதை தாம் உணர்ந்ததாக பார்வையாளர் கூறிச்சென்றனர்.
 
நடன நிகழ்வு வர்ணம் ,சூரன் போர், மாயவன் அவதாரம் ,மயில் நடனம் ஆகிய நான்கு தலைப்புக்களில் இடம்பெற்றது.தனிநடிப்பு இன்றைய நிலையில் பழைய  கலைஞர்களுக்கும் கலைக்கும் உள்ள மதிப்பினை மிகவும் சிறப்பான முறையில் எடுத்தியம்பியிருந்தது .
 
யாழ்ப்பாண கலாச்சார நிகழ்வுகள் யாவுமே தென்னிந்திய கலைஞர்களின் பிரசன்னத்தையே நம்பி நடாத்தப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில் முற்று முழுதாக யாழ்ப்பாண கலைஞர்களை கொண்டமைந்த நிகழ்வினை சவாலாக ஏற்று, சிறப்பாக நாடாத்தியமை இந்துவின் மைந்தர்களின் தனித்துவம் எனக்குறிப்பிடலாம். நிதிசேகரிப்பு நிகழ்வுகளை உள்ளுர் கலைஞர்களைக்கொண்டும் தற்போதைய காலத்தில்  நடாத்தலாம் என்பதற்கு ஒரு முன்மாதிரியானதாக இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்வில் சகல தரப்பு வயதினரும் கலந்து கொண்டிருந்தமை நிகழ்வுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் கலைஞர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.
 
பல வருட இடைவெளியின் பின்னர் இவ்வாறனதொரு நிதி சேகரிற்பிற்க்கான நிகழ்வு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டமையானது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கங்களின் தாய் சங்கம் என்ற நிலைப்பாட்டுடன் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றமை எடுத்துக்காட்டுகின்றது.
 
இந்த நிகழ்வுக்கான பிரதான அனுசரணையினை Micro PC ,Metro Travel நிறுவனங்கள் வழங்கியிருந்தன. இணை அனுசரணையினை City Hardware சாரங்கா நகைமாடம் Andra Printers ஆகிய நிறுவனங்கள் வழங்கியிருந்தன. ஊடக அனுசரணையினை உதயன் பத்திரிகை மற்றும் தமிழ் FM வானொலி வழங்கியிருந்தது.
 
இந்துவின் இணையத்திற்காக சுஜீவன் மற்றும் புகைப்படம் தெ.ஆதவன்.
 
 
 
 
Recent Posts
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
 Hindu Circle   
Maha Sivarathri on Friday 24 Feb 2017
 College   
Workshop on Rights to Information Act; Dr.V.Yoheswaran Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube