Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Jaffna Hindu Scouts celebrates centenary year with a massive forest Camporee, the “Hinduboree”
Posted on: 27/08/2016 (Saturday)
The Jaffna Hindu College Scout Troop was commissioned in the year 1916, and in 2016, it has completed 100 years and is proud and excited to celebrate the centennial year in a grandeur way with a massive forest based centenary camporee named “Hinduboree” from 7th - 11th September 2016 in Maruthankadu, Mullaitivu. Reaching the scouting centenary is another milestone in the 125 years history of Jaffna Hindu College, the Tamil nation’s pride in educational arena.
 
 
The Jaffna Hindu Scout troop has a remarkable history of serving not only the school but also to the community they belong to. Since its inception, it has been actively involving in many projects beneficial for the community and has always been in the forefront to serve the community when it’s in distress or in need. The scouts are very enthusiastic in celebrating the centenary year and have been organizing many events to mark this great moment. As a peak of all these celebrations, to leave an imprint of this milestone in the scouting history, the Jaffna Hindu Rover Crew, an association of old scouts of Jaffna Hindu College, has organized the Hinduboree, which will be held from the 7th to 11th of September 2016 at Maruthankadu, Vavunikulam Mallavi, in the Mullaitivu District. It will be a forest based camporee to give the scouts a real scouting experience. The one week event includes scouting and forest camping. The main objectives of the event are building good relationship with other communities and sharing of experience. More than 1000 scouts from 38 scouting districts in all over Sri Lanka will be taking part in the camporee.
 
தமிழரின் தலை நிமிர் கழகமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சாரணர் குழுவானது  1916 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் 4 ஆவதாக ஆரம்பிக்கப்பட்டது. 2016 இல் தனது நூற்றாண்டு வருடத்தில்  பயணித்துக்  கொண்டிருக்கின்றது. கல்லூரிக்கு மட்டுமல்லாது தாம் சார்ந்த சமூகத்திற்கான  தேவையான  சேவைகளை  தொன்று தொட்டு  முன்னெடுப்பது  யாவரும் அறிந்த விடயமே.
 
நூற்றாண்டு வருடத்தில் 
 
- ஆடிப்பிறப்பு - கலாச்சார நிகழ்வுகள்
- இரத்ததான முகாம் 
- நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு
- ஈருருளிப் பவனி 
- சாரணர் வெளிக்கள நாள்
- சாரணர் நூற்றாண்டு ஆவணக் கண்காட்சி 
- சாரணர் நூற்றாண்டுச் சின்னம் நிறுவுதல்
- நூற்றாண்டு  நூல் வெளியீடு
- ஆவணப்படுத்தல்
- கல்லூரி மாணவர்களிடையே போட்டி நிகழ்வுகள்
- 22 சாரணர்களின் ஜனாதிபதி விருத்துக்கான சமூக சேவைச் செயல் திட்டம்
- சாரணர் வினாடி வினாப் போட்டி
- சாரணியம் இல்லாத பாடசாலைகளில் சாரணியம் ஆரம்பித்தல்
- நவம்பரில் 100 பயன்தரு மரங்கள் நாட்டுதல்
- 1000  மரக் கன்றுகளை பாடசாலை  மாணவர்களிடையே பகிர்தல்
- நூற்றாண்டு விழா நிகழ்வுகள்   என்ற வகையில் ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகிறோம்.
 
இதில் தடம்பதிக்கும் நிகழ்வாக "இந்துபோறி  2016" என்ற வனப்பாசறை ஒன்றினை  நடாத்த யாழ் இந்து முன்னாள் சாரணர்களின் யாழ் இந்து திரிசாரணர் குழு தயாராகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வவுனிக்குளத்தின் அலைகரைப்  பகுதியில் அமைந்துள்ள மருதங்காட்டுப்பகுதியில் செப்டெம்பர் 7-11 வரையான காலப்பகுதியில் 1000 வரையான நாடு தழுவிய சாரணச் சகோதரர்களுடன் வனப் பாசறை நிகழ்வினை ஏற்பாடு செய்துவருகிறோம்.
 
நாடு தழுவிய வகையில் ஒழுங்கமைக்கப்படவுள்ள இந்த கம்போறி நிகழ்வில் 1000 சாரணர்கள் ஒன்றுகூடுவதனால் சகோதரத்துவம் மிளிரவும் வட மாகாண சாரணர்களுக்கு சாரணியச் செயல்பாடுகளில் வளமை பெற வாய்ப்புகள் அதிகரிக்கும். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாரணியம் செழிப்புற வழி ஏற்படுகிறது. இப்பாசறைப் பகுதி நீர் நிலைகளுடன் கூடியதான வனப்பகுதி என்பதனால் சாரண செயல்பாடுகளில் முக்கியமான வெட்டவெளி வாழ்க்கை, வன வாழ்க்கையுடன் கூடிய கடல் சாரணிய செயல்பாடுகளையும் ஒருங்கே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு சாரணர்களுக்கு கிடைக்கின்றது.மேலும் தலைமைத்துவப் பண்பை வளர்க்கவும் திறமையானவர்களை வெளிக் கொணரவும் திட்டமிடலை விருத்தி செய்யவும் சாரணர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாகும்.
 
அதில் நீச்சல், படகோட்டல், சுவடுகளை இனங்காணல், காட்டினுள் நடைபயணம், வனவியல் குறியீடுகள் என சாரணியத்திற்கு அத்தியாவசியமான பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாகிறது.
இந்துபோறியானது யாழ் இந்துக் கல்லூரிக்குரிய தனித்துவத்துடன், எமது கலாச்சார பண்பாட்டு அம்சங்களை நிலை நிறுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து தமிழ் உள்ளங்களையும் யாழ் இந்துக் கல்லூரியின் வளர்ச்ச்சியில் ஆர்வமுள்ளவர்களையும் கல்லூரிச் சாரணர் குழுவின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட அனைத்து உள்ளங்களின் ஆலோசனைகளையும் ஆதரவையும் வழிகாட்டலையும் வேண்டியும் விரும்பியும் பற்றி நிற்கிறோம்.
 
‘’ஆயத்தமாய் இரு’’ ‘’ சேவை செய்’’
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube