Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

125 விழாவை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்ற சாரணர் தீப்பாசறை
Posted on: 30/09/2015 (Wednesday)

எமது அன்னையின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக திரிசாரணர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் சாரணர் குழுவால் தீப்பாசறை நிகழ்வானது 25.09.2015 (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் கல்லூரி "D" தொகுதிக்கு முன்னால் அமைந்த திறந்த வெளியில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் சாரணர்களால் அழைத்துவரப்பட்ட பின்னர் அணிதலைவர்கள் தீச்சுடர் ஏற்றப்படும் இடத்தை சுற்றி புடைசூழ துருப்பு தலைவரின் தலைமையில் பண்டகசாலைப் பொறுப்பாளர்  தீச்சுடரை ஏற்றி வைத்தார்.

“தீச்சுடர் மேலெழும் செந்நிறம் பரவிடும்

காரிருள் மங்கியே ஒளி பெறும்

நாற்றிசை பாலர்நாம் வீறு கொண்ட வீரராய்

நானிலத்தின் நலனை என்றும் போற்றுவோம்"

இதனை தொடர்ந்து ஏனைய சாரணர்கள் அணிவகுத்து தீச்சுடர் வணக்கம் தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கு அனைத்து பழைய மாணவர் சங்க கிளைகளின் அங்கத்தவர்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் சாரணர்களும், எம் நாட்டு பழைய சாரணர்களும் பெரும் அளவில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் சாரணர்களின் கலை நிகழ்ச்சிகளும் பழைய சாரணர்களின் அனுபவப்பகிர்வும் இடம்பெற்றன.இறுதி நிகழ்வாக இடைவெளியற்ற இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இராப்போசனமும் வழங்கப்பட்டது. இதற்கான நிதிபங்களிப்பு ஐக்கிய இராட்சிய பழைய மாணவ சங்க கிளைச் செயலாளரும் எமது பழைய சாரணருமாகிய திரு.கி.கிருபாகரன் அவர்களால் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர்  30.04.2015 முதல் 03.05.2015 வரையான காலப்பகுதியில் இடம் பெற்ற பாசறை வாசத்துக்கான முழுசெலவும் சிட்னி பழைய மாணவர் சங்க கிளை தலைவரும் எமது பழைய சாரணருமாகிய திரு.கு.பாரத்தீபன் அவர்களால் வழங்கப்பட்டதை சுட்டி காட்டுவதில் பெரும் மகிழ்வடைகின்றோம்.சாரணர் செய்திகள் யாழில் இருந்து  இந்துவின் இணையத்திற்காக தியாகலிங்கம் மயூரசாகித்தியன்.

 

Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube