Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Australasia

கல்வி எங்கள் மூலதனம் - சிட்னியில் நடைபெற்ற செயலமர்வு
Posted on: 26/07/2015 (Sunday)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க சிட்னி கிளையினர் கல்வி எங்களின் மூலதனம் எனும் முன்னெடுப்பினை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்த வகையில் எமது தாயக வடக்கு கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.

இத்திடத்தின் கீழ் வன்னி மாவட்டப் பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகள் சிலவற்றிக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கியமை, துணைப் பாட நூல்கள் அன்பளிப்புச் செய்தமை, தளபாடங்கள் வழங்கியமை ஈருருளிகள் கொடுத்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.இந்த வரிசையில் எமது பிரதேசத்தின் தற்போதைய கல்வித் தளம்பலைக் கருத்திற் கொண்டு, ஒழுங்கு செய்த கருத்தரங்கு அவர்கள் சேவையில் மேலும் ஒரு மைல் கல்லாகின்றது.

கல்வி எங்கள் மூலதனம் - திரு.கு.பார்த்தீபன் அவர்களுடன் ஒரு நேர்முகம்

(தலைவர் - யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் , சிட்னி ஆஸ்திரேலியா)

எமது தாயகப் பிரதேசத்தின் கல்விசார் பிரச்சனைகளை ஆராய்வதன் மூலமும், அதனை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை கலந்தாலோசிப்பதன் மூலமும், எமது தாயகத்தில் ஒரு வளமான கல்வியியற் சூழ்நிலையை உருவாக்க உதவுதல் என்ற நோக்கத்துடன் கடந்த மார்ச் 20 திகதி செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது.

இந்த செயலமர்வில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரி, யூனியன் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பழைய மாணவர்கள் மற்றும் திரு.சி.செந்தில்ராஜன் சட்டத்தரணி, சிட்னி, திரு.எம்.பீட்டர்சிங்கம், ஆசிரியர் (Cumberland Public School, Sydney) , திரு.ச.பொன்னம்பலம்(ஓய்வுநிலை அதிபர் யா.இ.க.) வைத்திய கலாநிதி. பரன் சிதம்பரகுமார்  மற்றும் பல சமூக ஆர்வலர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த செயலமர்வின்  அறிக்கை மற்றும் எமது தாயக பிரதேச பல்கலைக்  கழக அனுமதி ஆய்வறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வில் பங்கு பற்றிய அனைவரிற்கும் சிட்னி பழைய மாணவர் சங்கத்தினர் தங்களது நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் கல்வி எங்கள் மூலதனம் செயற்திட்டம் பல வழிகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற செய்தியையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றனர்.

(தலைவர் - சிட்னி பழைய மாணவர் சங்கம்)

(தலைவர் - கல்விக் குழு - சிட்னி பழைய மாணவர் சங்கம்)

 

 

Recent Posts
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
 Hindu Circle   
Maha Sivarathri on Friday 24 Feb 2017
 College   
Workshop on Rights to Information Act; Dr.V.Yoheswaran Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube