Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

யாழ் இந்துவின் சாரணர் பாசறை
Posted on: 13/05/2015 (Wednesday)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினரின் பயிற்சிப் பாசறையானது 30/04/2015 முதல் 03/05/2015 வரையான காலப்பகுதியில் கல்லூரியின் புதிய அலுவலகத்தினை சூழவுள்ள பகுதியில் சிறப்புற நடைபெற்றது. 4 வருடங்களின் பின்னர் கல்லூரி சாரணர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்பாசறையில் 40 சாரணர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.சாரணர்களுக்கான பயிற்சிகள் யாவும் முன்னை நாள் துருப்புத்தலைவர் திரு.மு.ஜோதீஸ்வரன் (A/L 1992) அவர்களின் நெறிப்படுத்தலில் கல்லூரியின் பழைய சாரணர்களால் வழங்கப்பட்டன.
 
30/04/2015 வியாழக்கிழமை பி.ப 4.00 மணியளவில் பாசறை ஆரம்பமானது. கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா அவர்கள் சாரணர் கொடியேற்றி பாசறையினை ஆரம்பித்து வைத்தார்.  5 அணியினருக்குமான கூடாரங்களும் அமைக்கப்பட்டு அணி முறைமையினை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்கள் இடம்பெற்றன. மூன்று இரவுகள் கொண்டமைந்த இப்பயிற்சிப் பாசறையில் சாரணர்களுக்கு அத்தியாவசியமான பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. வனவியல் குறியீடுகள், சமிக்ஞைகள், பாத்திரம் இல்லாமல் சமைத்தல், திசையறிகருவி கையாளும் முறை, முடிச்சுகள், வழியாக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளல், முதலுதவி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன் அணி முறைமையினை வலுப்படுத்தும் வகையிலான போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றது.
 
 
02/05/2015 சனிக்கிழமை அன்று பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சாரணியத்தில் மாணவர்களினை பங்குபெற வைப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு தீர்க்காமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
 
மாலை 4.30 மணியளவில் கல்லூரி அதிபர் அவர்கள் கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு, சாரணர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் பாசறக்கு அழைத்துவரப்பட்டார். அதனைத்தொடர்ந்து சாரணிய மாவட்ட ஆணையாளர் திரு செ.தேவரஞ்சன், குழுச் சாரணத் தலைவர் திரு க.சுவாமிநாதன்  அவர்கள் சகிதம் அணிப் பரிசோதனையினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் "நூறு வருடத்தினை நோக்கிய சாரணர்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க பூரண ஆதரவினை வழங்குவதாகவும்,  பழைய சாரணர்களின் துருப்பின் மீதான ஈடுபாடு தொடர்பாகவும்" தனது பாராட்டினைத் தெரிவித்தார்.  பாசறையில் கலந்துகொண்ட சாரணர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பாசறையினை பார்வையிட ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெற்றேர்கள், பழைய மாணவர்கள் பாசறையினை பார்வையிட்டனர். சாரணர்கள் இரண்டு கயிற்றில் நடந்து அனைவரினது கவனத்தினை தம்பால் ஈர்த்துக் கொண்டனர்.
 
அத்துடன் பாசறையில் இரவு வேளையில் தீப்பாசறை நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது. தீப்பாசறை நிகழ்வில் சாரணர்களின் கலை நிகழ்வுகள், அனுபவப்பகிர்வுகள் இடம்பெற்றன.
 
03/05/2015 ஞாயிற்றுக் கிழமை, இந்துவின் திரி சாரணர் துருப்பு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மாவட்ட ஆணையாளர் திரு தேவரஞ்சன், திரிசாரண ஆணையாளர் திரு.தவகோபால், சாரணியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முன்னை நாள் குழுச்சாரணத் தலைவர் திரு.புவனேந்திரன், கல்லூரி அதிபர் திரு.தயானந்தராஜா, குழுச்சாரணத் தலைவர் திரு.சுவாமிநாதன் மற்றும் கல்லூரி சாரணர்கள், பழைய சாரணர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். மூன்று திரி சாரணர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு யாழ் இந்துக் கல்லூரியின் திரி சாரணர் குழுமம் மீள ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
 
அதனைத் தொடர்ந்து சாரணியத்தில் புதிதாக இணைந்த சாரணர்களுக்கான சின்னஞ்சூட்டல் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் சாரணர் குழுவில் புதிதாக இணைந்து ஆரம்ப பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த 10 சாரணர்களுக்கான அங்கத்துவச் சின்னம் சூட்டிவைக்கப்பட்டது. அத்துடன் மாவட்ட ஆணையாளர் நாடாவிற்கான தகமைகளை பூர்த்தி செய்த சாரணர்களுக்கான மாவட்ட ஆணையாளர் நாடாவும் அணிவிக்கப்பட்டது.
 
பாசறையின் இறுதி நிகழ்வாக, சிறந்த செயற்பாடுகளுக்கான  விருதுகள் வழங்கி  கெளரவிக்கப்பட்டது. அத்துடன் காலை 11.30 மணியளவில் கொடியிறக்கலுடன் பாசறை இனிதே நிறைவுற்றது.
 
நூற்றாண்டை நோக்கிய இந்துவின் சாரணர்களின் பயணத்தில் இப்பாசறையினை சிறப்புற நடாத்திமுடித்த 4வது யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினருக்கு எமது வாழ்த்துக்களினையும் பாராட்டுக்களினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இப்பாசறையினை திறம்பட நாடாத்த உலகெங்குமுள்ள இந்துவின் முன்னை நாள் சாரணர்கள் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube