Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College News

125 ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் தமிழர் தலை நிமிர் கழகம்
Posted on: 01/10/2014 (Wednesday)
1890 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த எம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு விஜயதசமித்திரு நாளுடன் (இன்றுடன் 3rd Oct 2014) 125ஆவது ஆண்டுள் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதைகளை தன் கல்வி வளத்தால் காத்திரமாக்கிய அன்னையின் பணி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
 
ஈழத் தமிழர்களின் கல்விச் சாதனைகளின் தனிப்பெருங் கழகமாக நிமிர்ந்து நிற்கின்றது எம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. சாதனைகளையும் வேதனைகளையும் தாண்டி 125 ஆண்டுகள் தன் கல்விச் சேவையால் பெருமிதம் அடைந்து நிற்கின்றாள் இந்து அன்னை. தமிழர் தம் எழுச்சியின் எல்லாப் பக்கங்களிலும் இந்து அன்னையின் நாமம் எழுதப்பட்டே இருக்கின்றது என்றால் மிகையாகாது.
 
அன்னிய ஆதிக்கமும், வேற்று மதப் பரம்பலாலும் சைவமும் தமிழும் நலிவுற்றிருந்த வேளை, அதை எதிர்த்து தமிழர் தம் தளபதியாகப் போராடிய ஸ்ரீலஸ்ரீ.ஆறுமுகநாவலரின் சிந்தையில் உருவான தீப்பொறி நூற்றாண்டுகள் கடந்தும் ஆயிரம் ஆயிரம் தீபங்களுக்கு ஒளியூட்டிகொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு என்று ஒரு கல்விச் சலை தோன்ற வேண்டும் என்ற முனைப்பின் காரணமாக 1890 ஆம் ஆண்டு இதே போல் ஒரு விஜயதசமித் திருநாளில், நியாயவாதி.சி.நாகலிங்கம், மு.பசுபதிச் செட்டியார் என்போரது உயர்ந்த தியாகங்களால் எங்கள் கல்லூரி அத்திபாரமிடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்து உயர் பாடசாலை என்ற பெயரில் வித்திடப்பட்ட எம் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்ற பெயரில் இன்று வானளவு உயர்ந்து வையகம் எல்லாம் கிளைகள் பரப்பி தான் பெற்ற புத்திரர்களால் மகத்துவம் அடைந்து நிற்கின்றது.
 
வரகு விழைந்த நிலத்தில், இந்த கல்விக்கூடம் அமைந்ததாலோ என்னவோ இது பலரின் வயிற்றுப் பசியையும், அறிவுப்பசியையும் 125 ஆண்டுகளாகத் தீர்த்து வைக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது. அர்ப்பணிப்பு உள்ள அதிபர்களின் வழி நடத்தலாலும், தாராள சிந்தை உள்ள ஆசிரியர்களின் நெறிப்படுத்தலாலும், இந்து மைந்தர்களின் ஆளுமையாலுமே இந்த நீண்ட கல்விப்பயணம் சாத்தியமானது என்பதே சத்தியம்.
 
பிடியரிசி பெற்றும் வீட்டுக்கொரு தேங்காய் பெற்றும் திரு.V. காசிப்பிள்ளை போன்ற மகான் களால் வாடாது பாதுகாத்த எம் கல்லூரி பயிர் இன்று ஆயிரம் பேருக்கு நிழல் தரும் அற்புதத்தை இந்த 125 வது ஆண்டில் அந்த மகான்கள் அருவுருவங்களாய் எம்மிடையே நின்று காண்பார்கள் என்பது திண்ணமே!
 
 

இந்து அன்னை அன்றும் இன்றும்

(JaffnaHindu.Org இணையத்தள கோர்வையில் இருந்து)

Year 1974

Year 1977

Year 1987

Year 2003

Year 2005

Year 2006

Year 2009

Year 2013

Year 2014

 

Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube