Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Canada

சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்து கனடா விருந்து விழா 2013: பழைய மாணவர்கள் கௌரவிப்பு
Posted on: 12/04/2013 (Friday)

யாழ்.இந்துக்கல்லூரியின் வருடாந்த விருந்து விழா வழமைபோல் இந்த வருடமும் தவறாது நடைபெற்றது.ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமைScarborough Banquet & Convention Centre இல் வருடாந்த  விருந்து விழா திரு.கதிர்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விழா குறித்த நேரத்தில் ஆரம்பமானது.கனடா தேசிய கீதத்தை செல்வி.வைசாலினி கிருஸ்ணானந்தனும் யாழ் இந்துக் கல்லூரிக் கீதத்தை கலாநிதி.மைதிலி தயாநிதியும் தமக்கே உரிய தனித்துவ பாணியில் வெகு சிறப்பாக இசைத்தனர்.தமிழர் பண்பாட்டிற்கு அமைய வந்தோரை வரவேற்று திரு.கிருஷ்ணானந்தன் அவர்கள்  வரவேற்புரையை நிகழ்த்தினார்.விசேட குழுத்தலைவர் மோகன் சுந்தரமோகன் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் வளர்ச்சி பற்றி சுருக்கமாகக்குறிப்பிட்டார்.

நாவுக்கு ருசியான அறுசுவை உணவுவகைகள் மட்டுமன்றி கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.திருமதி.சியாமா தயாளனின் மாணவிகள் செல்வி.மதுமிதா பாஸ்கரன், செல்வி.லக்சிகா கணேசலிங்கம் ஆகியோர் சிறப்பாக நடனமாடி சபையோரைக் கவர்ந்தனர்.Ryerson University மாணவர்கள் Fusion முறையிலான நடனத்தை ஆடி சபையோர் கவனத்தை மிகவும் ஈர்த்துக்கொண்டனர். கண்ணைக் கவரும் நடனங்கள் மட்டுமன்றி காதுக்கு இனிமையான  இனிய பாடல்களை சுப்பசிங்கர் புகழ் செல்வி.சரிகா நவநாதன் அவர்களும் செல்வி. வைஷாலி கிருஷ்ணானந்தன் அவர்களும் கனிவான குரலில் பாடி சபையோரை  வியப்பில் ஆழ்த்தினர்.

விழாத்தலைவர் திரு.கதிர் சுப்பிரமணியம் அவர்கள் தலைமை உரையில் வாழும் காலத்திலேயே ஒருவரது  திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மனித நேயத்தைப்பற்றி விளக்கினார். அதற்கு அமைவாகவே   இந்துவின் மைந்தர்கள் பலர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளில் துறைசார்ந்த நிபுணர்களாக உயர்ந்த நிலையில்  இந்துவின் மைந்தர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான  பட்டயக்கணக்காளர் திரு.லோகன் சேனாதிராசாவும் (Chartered Accountant) அவர் தம் பாரியாரும் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் இந்து மைந்தர்கள்  நால்வர்  இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். திரு.அ.ஜெயகுமார்  (A successful business man in USA), சிறந்த பொருளாதார வளர்ச்சிக்குரிய வழிகாட்டியாகவும் நன்னடத்தை மன்னிப்பு வழங்கும் அதிகாரி நிலையில் கனடாவில் வாழும் திரு.நந்தா குணரத்தினம் (Ministry of Community Safety and Correctional Services), வர்த்தக ரீதியாக சிறந்து விளங்கும் திரு.கஐன் ஆறுமுகம் (Owner Lucvaa Kitchens), மற்றும் பொறியியற்துறையில் சிறந்து விளங்கும் திரு.ச.ஜெயக்குமார் (Academic Achievement – 2013) ஆகியோர் தம்பதிகளாகக்கௌரவிக்கப்பட்டனர். திரு.அ.ஜெயகுமார்  அவர்களின் மனைவி Dr.அனுஷா முன்னாள் யாழ்ப்பாண மேயர் மற்றும் யாழ் பழைய மாணவர் சங்க செயலாளர் நாகராஜாவின் மூத்த மகள் ஆவார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக செல்வி. கீர்த்தனா நாகரத்தினம் சிறப்பாக தொகுத்து வழங்கியதையும் இவ்விடத்தில் நினைவுகூரல் அவசியமானதாகும்.  ஆனாலும் தமிழிலும் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்காதது சிறு குறையாக அமைந்தது.இவ்வருட விருந்து விழாவில்  யாழ்ப்பாண  இந்துக்கல்லூரியின்  இளம் பழைய மாணவர்கள்  பலர்   புதுமுகங்களாகவும் கலந்து சிறப்பித்தமையும் இவ்விடத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிடலாம்..  பொதுவாக விழா சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவேறியது.

JHCA Canada Award of Excellence: Academic Achievement  2013 goes to Mr.P.Jeyakumar

Presented by: Mr&Mrs.Krishnanandan - Secretary JHCA Canada

JHCA Canada Award of Excellence: Entrepreneur 2013 goes to Mr.Gajen Arumugam

Presented by: Mr&Mrs.Nanthacumar

Special Guest Mr.Nandha Gunaratnam welcomed by Mr & Mrs.Ravindran

Chief Guest Mr.Logan Senathirasa welcomed by Mr& Mrs.Kathir Subramaniam  - President JHCA Canada

Guest of Honour Mr.A.Jeyakumar welcomed by Mr & Mrs.Chandramohan - Project Committee
 

Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube