Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

கலக்கினார் மதுசன்; இந்துக்களின் போரில் யாழ் இந்து அமோக வெற்றி - காணொளி இணைப்பு
Posted on: 22/03/2014 (Saturday)

ஐந்தாவது இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டி கோலாகல நிறைவு.இந்துக்களின் போரில் யாழ் இந்து 9 விக்கட்டுகளால் அமோக வெற்றி கொண்டது.இரண்டாவது நாள் ஆட்ட விறுவிறுப்பு அனைவைரையும் வியக்கவைத்தது அத்துடன் மதுசனின் அபார ஆட்டத்தில் கதி கலங்கியது கொழும்பு இந்து.

இலங்கையின் வர்த்தக தலைநகரான  கொழும்பின் பிரபல இந்துக் கல்லூரியான கொழும்பு இந்துக் கல்லூரிக்கும், கலாசாரத்தின் தலை நகரம் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையேயான 5வது இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்ட போட்டியானது 21,22/03/2014 திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானதில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக இரு கல்லூரிகளின் பழைய மாணவர் சங்க தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
1982ம் ஆண்டு ஆரம்பமாகிய இந்த போட்டித் தொடரானது நாட்டின் அசாதாரண சூழ் நிலைகளினால் இடை நிறுத்தப்பட்டமையை தொடர்ந்தும் 5வது தடவையாக இவ்வாண்டு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
முதலாம் நாள் நிகழ்வுகள் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகின. விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் பூரண மரியாதையுட்ன் கல்லூரி மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  கல்லூரிகளின் கீதங்கள் இசைக்கப்பட கல்லூரி அதிபர்களினால் கல்லூரிக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கல்லூரி துடுப்பாட்ட அணியினர் அற்முகப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.  
 
முதலாவது நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணி கொழும்பு இந்துக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாட அழைத்தது.  ஆரம்பத்தில் கணிசமான அளவில் விக்கெட்டுகள் இழக்கப் பெற்றாலும் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத்தினால் கொழும்பு இந்துக் கல்லூரி 200 ஓட்டங்களுடன் சகல விக்கெற்றினையும் இழந்தது. யாழ் இந்து சார்பில் மதுசன் 4 விக்கெற்றினை பெற்றுக்கொண்டார்,  அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணித் தலைவர் ஜெ.கல்கோவன் தலமையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அணித்தலைவர் கல்கோவன் 23 பந்துகளில் 28 ஒட்டங்களினை பெற்றிருந்தார். மதுசன் மற்றும் பாணுகோபனின் இணைப்பாட்டத்தில் யாழ் இந்து அணி வலுவான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலாம் நாள் ஆட்ட நிறைவில் யாழ் இந்துக் கல்லூரி 6 விக்கெட்டுக்களினை இழந்த நிலையில்  48 ஓவர்களில் 192 ஓட்டங்களை பெற்றிருந்தது. 
 
இந்துக்களின் துடுப்பாட்டத்தில் இரண்டாம் நாள் ஆட்டம் ரசிகர்களின் பெரும் எதிபார்ப்புகளுடன் ஆரம்பமாகியது. மதுசனின் அபாரமான ஆட்டதினால் 73 பந்துகளில் 63 ஓட்டங்களை யாழ் இந்துக் கல்லூரிக்காக பெற்று தந்தார்.  
 
முதலாவது ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களினை பெற்று முதலாவது ஆட்டத்தில் 74 ஓட்டங்களினால் கொழும்பு இந்து கல்லூரி அணியினை முன்னிலை வகித்தது.
 
இரண்டாவது ஆட்டத்திற்காக களம் புகுந்த கொழும்பு இந்துக் கல்லூரியின் உதிரிகள் கணிசமான அளவில் வீழ்த்தப்பட்டன. 97 ஓட்டங்களுக்குள் கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் சகல இலக்குக்களும் வீழ்த்தப்பட்டன.  24 ஓட்டங்களினை வெற்றி இலக்காக கொண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் களம் புகுந்தனர். அணித்தலைவரின் இறுதியான 4 ஓட்டங்களுடன் யாழ் இந்து அணியினர் ஒரு இலக்கினை மட்டும் இழந்து 9 விக்கெட்டுக்களால் ஐந்தாவது இந்துக்களின் போரில் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.
 
பின்னர் வீரர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று கல்லூரி கொடியிறக்கலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே இடம்பெற்றன.  
 
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ் இந்துவின் மைந்தன் மதுசன் தெரிவு செய்யப்பட்டார். மற்றும் சிறந்த களத்தடுப்பாளராக யாழ் இந்துவின் அணித்தலைவர் கல்கோவனும், பந்து வீச்சாளராக யாழ் இந்துவின் பாணுகோபனும், துடுப்பாட்டகாரராக கொழும்பு இந்துவின் யசோதரனும் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கான கேடயங்கள் மற்றும் பண பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
 
 
இடம்பெற்ற இந்துக்களின் போர்களில் ஒரு வெற்றினை கொழும்பு இந்துக் கல்லூரியும், 3 சம நிலை முடிவுகளும், இம்முறை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் பதிவுசெய்துள்ளது.  
 
யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட போட்டிகள் தொடர்பான சர்சைகள் நிலவிவரும்  வேளையில் இந்துக்களின் போர் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றமை சிறப்புமிக்கதொரு விடயமாகும்.
 
இந்துவின் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து  சுஜீவன் மற்றும் சஜீவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:

Sivapiragasham Mayoorran (Singapore) Posted Date: March 22, 2014 
Congratulations guys.. Proud of you all..

Gowry Shanker Ponnudurai (Australia) Posted Date: March 22, 2014 
Well done guys, Go Hindu Go.

Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube