Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Reunion

Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
Posted on: 20/04/2017 (Thursday)

The youth wing of the Jaffna Hindu Alumni celebrated the Alumni Fiesta 2017 on Saturday, 15.04.2017, in the open air under lights at the KKS beach. The celebration which started at 6.30 PM ended at 10.30 PM with dinner. The youth wing of the Jaffna Hindu Alumni was formed in 2011 and has been celebrating this Alumni Fiesta annually. This year's fiesta was organized by the 2011 A/L batch. In addition to the Saturday’s get-together, they have also organized a cricket fiesta and a basketball fiesta. As a souvenir of the event they also released a music CD "Hindupadai".

காங்கேசன்துறைக் கடற்கரையில் கோலாகலமாக இடம்பெற்ற யாழ் இந்துவின் இளையோர் ஒன்றுகூடல்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய  இளைய மாணவர்களினது ஒன்றுகூடல் நிகழ்வானது "Alumni Fiesta 2017" காங்கேசன்துறைக் கடற்கரையில்  15/04/2017 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிமுதல் திறந்த வெளியில் மின்னொளியில்  மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது. யாழ் இந்துவின் இளைய பழைய மாணவர்களினை உள்ளடக்கியதான Youth Wing அமைப்பானது 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடாவருடம் ஒன்றுகூடல் நிகழ்வுகளினை நடாத்திவருகின்றது. இவ்வருட நிகழ்வுகள் 2011 உயர்தர மாணவர்களின் ஒழுங்கமைத்தலில் இடம்பெற்றது. பாடசாலையினை விட்டு வெளியேறும் இறுதி 5 வருட பழைய மாணவர் பிரிவுகளை உள்ளடக்கிய இவ்வமைப்பானது  நட்புறவினை உருவாக்கும் நோக்கிலும், பழைய மாணவர்களுக்கிடையேயான தொடர்பினை தொடர்ந்து பேணும் வகையிலும் உருவாக்கப்பட்டது.


மாலை 6.30மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்விகள் இரவு 10.30 மணியளவில் இரவு விருந்துடன் நிறைவு பெற்றது. 2011 தொடக்கம் 2015 வரையிலான யாழ் இந்துவின் உயர்தரப்பிரிவினர் இந்த ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.

ஒன்றுகூடல் நிகழ்வுகள் மட்டுமல்லாது உயர்தரப்பிரிவுகளுக்கிடையிலான துடுப்பாட்டம்- "Cricket Fiesta" மற்றும் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் "Hook Fiesta" ஒழுங்கமைக்கப்பட்டது.

12/04/2017 அன்று மாலை 4.00 மணிமுதல் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று, இரவு 12.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது. கூடைப்பந்தாட்டப் போட்டிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். மின்னொளியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கூடைப்பந்தாட்ட போட்டியின் முதலாவது கிண்ணத்தினை 2014 உயர்தரப் பிரிவு அணியினர் தமதாக்கிக்கொண்டனர்.

அத்துடன் இவ்வருடத்திற்கான துடுப்பாட்டப்போட்டிகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதுடன் முதல் முறையாக மின்னொளியில் இடம்பெற்றமை சிறப்புக்குரிய விடயமாகும். துடுப்பாட்டப்போட்டிகள் 13/04/2017 அன்று காலை 8.00 மணிமுதல் 14/04/2017 அதிகாலை 3.30 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. துடுப்பாடத்திற்கான கிண்ணத்தினை 2011 உயர்தரப் பிரிவு அணியினர் கைப்பற்றினர்.


2017 Alumina Fiesta நிகழ்வினை சிறப்பிக்கும் வகையிலான இசைதொகுப்பு "இந்துப்படை" வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வானது ஒரு ஒன்றுகூடல் என்பது அப்பால்பட்டு இளையோரினை கல்லூரி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்த ஒரு சந்தர்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

இவ்வருடத்திற்கான நிகழ்வினை சிறப்புற ஒழுங்கமைத்து நடாத்திய 2011 உயர்தரப் பிரிவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்துவின் இணையத்திற்காக கொழும்பிலிருந்து இருந்து தர்மரத்தினம் சுஜீவன்.

Cricket Fiesta Summary Report - Released for Cricket Fiesta 2017

 

Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube