Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Interviews

கல்லூரி படையணி ஒளிப்பதிவு இயக்குனர் குகேந்திரன் கிருத்திகனுடனான செவ்வி
Posted on: 06/06/2014 (Friday)

கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்ட இந்த பாடல் நிச்சயம் உங்கள் மனதையும் தொடும் என்பதில் ஐயமில்லை.

மேலாக இந்து அன்னையின் புதல்வர்களால் உருவாக்கம் பெற்ற இந்த ஒளிப்பாடல் திரு.குகேந்திரன் கிருத்திகன் (2008 உயர்தரம்) அவர்களால் இயக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பாடல்வரிகள் இசை மற்றும் நடிப்புகள் கூட இந்துவின் மைந்தர்களே. இப்படி இலைமறை காயான திறமைகளை கண்டறிந்து அதனை உலக இந்துவின் மைந்தர்களின், ஏன் உலக தமிழர்களின், முற்றத்தின் கோடிட்டு காட்டுவதில் நாம் பெருமையும் மட்டற்ற ஆனந்தமும் அடைகிறோம்.

இன்று அதிகாலை கிருத்திகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு எடுக்கபட்ட செவ்வியின் எழுத்து வடிவம்.

 

பார்த்தீபன்: உங்களை பற்றி அறிமுகம் செய்வீர்களா? முக்கியமாக யாழ் இந்து சார்பான விடயங்களுடன்.

கிருத்திகன்:

இரண்டாயிரமாம் ஆண்டு தரம் ஆறில் யாழ் இந்து கல்லூரியில் இணைந்து இந்து அன்னையுடனான எனது பந்தத்தை ஆரம்பித்தேன்
கல்லூரி நாட்களில் சாரணர் இயக்கம் இன்ரரக்ட் கழகம் ஸ்க்ரபிள் கழகம் சிறுவர் கழகம் என்பவற்றில் இணைந்து பணியாற்றியதுடன் கல்லூரியில் நடைபெறும் விழாக்களில் நாடகங்கள் மேடையேற்றும் சந்தர்ப்பங்ளில் எல்லாம் என்னை அழைத்து போய்விடுவார்கள் குறிப்பாக எம்மை இனங்கண்டு எமக்கு கலைப்பயிற்சியளித்த முத்துக்குமாரு ஆசிரியர் விமலநாதன் ஆசிரியர் துஷ்யந்தன் ஆசிரியர் ஆகியோர் மீது எமக்கு பாடம் எடுக்கவரும் ஆசிரியர்கள் எப்ப தான் சேர் கிருத்திகன வகுப்பில் இருக்க விடுவியள் என கேட்பதுண்டு.

இரண்டாயிரத்தி எட்டு உயர்தரம் உயிரியல் பிரிவில் கற்று வௌியேறி மென்பொருள்துறையில் கற்று கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் நேரம் கிடைக்கும் போது பொழுதுபோக்காக திரைத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்

Kiruthigan Kuhendran - Director - College Gang Video Song (Jaffna Hindu 2008 Bio)
 

பார்த்தீபன்: நீங்கள் இவ்வாறான ஒரு பாடலை அதுவும் ஒரு ஒளிப்பதிவாக  வெளியிடுவதற்கான கருப்பொருள் என்ன?

கிருத்திகன்:

கல்லூரியில் ஏற்பட்ட நட்பு கல்லூரியை கடந்து ஒவ்வொருவருக்கும் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் இறுதிவரை மாறாது தொடர்ந்துவரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பாடலை தயாரித்தோம். இந்த பாடல் கேட்கும் ஒவ்வொருவரது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினோம்.

இந்த பாடல் யாழ் இந்து கல்லூரி மாணவர்களையும் தாண்டி, கேட்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் கல்லூரி நட்புகள் பற்றி நினைக்க வைப்பதாகவும், இதன் மூலம் அனைவரையும் நம் கல்லூரி படையணி வீடியோ பாடல் அடையவேண்டும், யாழ் இந்து கல்லூரி பழையமாணவர்களின் நட்பு எப்போதுமே தனியானது என அனைவரையும் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் கேட்கும் வகையில் பாடல் வரிகளை அமைத்தோம்

 

பார்த்தீபன்: அந்த கருப்பொருளை காட்சிப்படுத்த உங்களுக்கு எவ்வளவு காலம் சென்றது ? எதற்காக ?

கிருத்திகன்:

கடந்த மூன்று வருடங்களாக கல்லூரி நட்பு பற்றி பாடல் செய்ய என்னை பழையமாணவர்கள் கேட்டிருந்த போதும் தற்போது தான் வளங்கள் முழுமையாக கிடைத்ததால் பழையமாணவர்கள் ஒன்றுகூடலில் திரையிடுவதற்காக உருவாக்கிய இந்த பாடலை தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருக்கின்றோம்.

மிகக்குறுகிய கால திட்டமிடலில் ஒருமாதத்திற்கும் குறைவான நாட்களில் இசையமைத்து பாடல் வரிகள் எழுதி பாடி பல்வேறுபட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தி படத்தொகுப்பு செய்து வௌியிடப்பட்ட பாடல் இது.

 

பார்த்தீபன்: இதற்கான இசை மற்றும் பாடல் வரிகளில் யாருடைய பங்களிப்புகள் இருந்தன ? அவர்களை பற்றி ஓரிரு வரிகளில் சொல்லமுடியுமா?

கிருத்திகன்:

கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை எமக்கு தந்திருந்தவர் நம்மோட கல்லூரி பழைய மாணவன் ஜெகதீஸ். கல்லூரி நாட்களில் நமது வில்லுபாட்டு மற்றும் நாடகங்களின் போது பின்னணி இசை வழங்கவந்த சந்தர்ப்பங்களில் அறிமுகமானவர் இசைக்குடும்பத்தில் பிறந்து சகல இசைக்கருவிகளையும் கற்ற இவர் இசைத்துறையில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்

பாடல் வரிகளை உருவாக்க என்னோடு பங்களிப்பு செய்தவர் சிந்துஜன் கல்லூரி நாட்களில் தான் எழுதிய கவிதை தொகுப்புகளை என்னிடம் தந்து இதுபோல பாடலும் எழுதவேண்டும் என கூறிக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டில் சிறந்த வீரரான இவர் இந்த பாடலின் மூலம் பாடலாசிரியராக பரிணமிக்க வைத்துள்ளேன்.

      

     Jegathees Arunasalam - Musician (2004 Arts)                     Thanigasalam Sinthujan - Lyrics Writer (2008 Maths)

பார்த்தீபன்: இந்த ஒளிப்பதிவு வெளியீட்டின் இயக்குனர் என்ற வகையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு வெற்றி கண்டீர்கள்? அதற்கான திறைமைகளை நீங்கள் எவ்வாறு வளர்த்துகொண்டீர்கள் ?

கிருத்திகன்:
 

இயக்குனர் என்ற வகையில் படப்பிடிப்பில் முன்னனுபவம் அற்ற பல பழையமாணவர்களை நடிக்கவைப்பது சிரமமாயிருந்து. நாம் தேர்வு செய்த பழைய மாணவர்களும் ஒவ்வொரு சவாலான துறைகளில் சாதித்து கொண்டிருப்பவர்களையே பிரதானமாக நடிக்கவைத்தோம்.

பாடல் உருவாக்குவதற்கு கால அவகாசம் குறைவாக இருந்தது. பாடலுக்கான ஆதரவினை புலம்பெயர் பழைய மாணவர்களான நிரோசன் மற்றும் கபிலன் ஆகியோர் வழங்கியிருந்தார்கள். இவர்கள் கல்லூரி நாட்களில் என்னோடு நாடகங்களில் பங்கெடுத்த நண்பர்கள். ஒளிப்பதிவாளர் தர்சன் சுஜீவன், துவான் மிதுன்ராஜ் இன்னும் பல பழையமாணவர்கள் இரவுபகல் பாராது எம்மோடு படப்பிடிப்புகளில் பணியாற்றியிருந்தனர்.

பலவேறுபட்ட வாகனங்கள் படகுகள் மோட்டார் வண்டிகள் பயன்படுத்தும் போது போக்குவரத்தை படபிடிப்புக்காக நிறுத்துவதற்கு அனுமதி, இரவு நேர படப்பிடிப்புக்கு அனுமதி, பாடல் வரிகளுக்கு அனுமதி, வௌியீட்டிற்கு அனுமதி என பல சவால்களை சந்தித்தபோதும், அன்னையின் வளங்களையும் மற்றும் அன்னையின் புதல்வர்களையும் பயன்படுத்த கல்லூரி அனுமதி கிடைக்கப் பெற்றமையே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக  அமைந்தது.

படப்பிடிப்பில் சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கமரா, கிரேன், சிலைடர் காற்று கருவிகள், புகை கருவிகள், லைட்டிங் தர்மாகூல் இன்னும் பல உபகரணங்கள் பயன்படுத்தியதோடு இவற்றுக்கான திறமைகளை இந்துக்கல்லூரியே என்னை இனங்கண்டு பட்டை தீட்டியதால் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

 

பார்த்தீபன்: இறுதியாக , உங்கள் எதிர்கால கனவுகள் பற்றி?

கிருத்திகன்:

கணினித்துறை தவிர்ந்த நேரங்களில் தொடர்ந்தும் தரமான படைப்புகளை தரவேண்டும், அவற்றால் பார்ப்பவர்களுக்கு ஏதாவது பயன் இருக்கவேண்டும், கணினிதுறையில் படிப்பை முடித்து இன்று போல் என்றுமே இந்து அன்னையின் செல்லப்புதல்வனாய் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.

தற்போது இலங்கை திரைத்துறை முன்னேற்றப்பாதையில் வீறுகொண்டெழுந்துள்ளது. இந்த பெருமை மிகுந்த வரலாற்று காலப்பகுதியிலே  இதுவரை காலமும் எனக்கு வழங்கிவந்த பேராதரவுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி பார்த்தீபன் அண்ணா.

 
 
கல்லூரி படையணி ஒளிப்பாடல் உருவாக்கத்தின் சில காட்சிகள்
(Making of College Gang - Some Scenes)

 

 

Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:

S.Senthilnathan (Uk) Posted Date: June 08, 2014 
Well done boys
S.Senthilnathan uk

THARSAN (Sri Lanka) Posted Date: June 08, 2014 
வாழ்த்துக்கள் கிருத்தி, ஜெகதீஸ்

Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube