Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Inter House Athletic Meet held on 9th Feb; Mr.Arasakone Agilan Chief Guest
Posted on: 11/02/2017 (Saturday)

Jaffna Hindu College Annual Inter-house Athletic meet was held on the 9th Feb 2017 in the college grounds under the patronage of Principal Mr.I.Thayanantharajah. Mr.Arasakone Agilan, a past student of Jaffna Hindu, was the chief guest. The event started with a special Pooja at Gnana Vairavar kovil around 2 PM and then the chief guest and other guests were taken to grounds on a procession paraded by college band and prefects and house’s march past. Hon.E.Saravanapan M.P also joined in the procession.

The athletic meet started with hoisting of school flag by the senior prefect and house flags by the respective house captains. The oath taking in accordance with the intermnational olympic rules took place next. Following that was the lighting of olympic torch and then the athletic event started. At the end of the sporting events, the Sellathurai house was on the top of leader board with 461 points and claimed the champion trophy. Rallying iust behind Sellathurai house was Nagalingam house with 424 points and secured the second place. Pasupathi house with 383 and Sabapathy house with 344 points came third and fourth respectively.

2017ம் ஆண்டிற்கான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 09.02.2017 வியாழக் கிழமை அன்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமயில் சிறப்புற இடம்பெற்றது. , இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவன் திரு அரசக்கோன் அகிலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 
 
நண்பகல் 2.00 மணியளவில் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவ முதல்வர்கள் கல்லூரிக் கொடியினை ஏந்தியவாறு அணி நடையின் தலைமை பெறுப்பினை பெற்றுவர நாகலிங்கம், சபாபதி, பசுபதி, காசிப்பிள்ளை, செல்லத்துரை இல்லங்கள் தத்தமது வர்ண நிறக்கொடிகளுடன் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்,
 
எமது கல்லூரியின் பெருமை பொருந்திய நீலம் வெள்ளை கொடியானது 5 இல்லங்களினைச் சேர்ந்த இல்ல தலைவர்களினால் எடுத்துவரப்பட்டு  கொடிக் கீதம் இசைக்க கல்லூரி சிரேஷ்ட மாணவ முதல்வனால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இல்லக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.  5 இல்லக் கொடிகளும் மோட்டார் வண்டி பவனியாக மைதானத்தினை சுற்றி வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.
 
சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டி விதிகளுக்கமைவாக கல்லூரி சிரேஸ்ட மாணவ முதல்வனின் வழிகாட்டலில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  ஒலிம்பிக் தீபமாது கல்லூரி மெய்வல்லுனர் சாதனையாளரினால் எடுத்து வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 
தரம் 6 மாணவர்களின் இடைவேளை நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.
 

 
செல்லத்துரை இல்லமானது 461 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து நாகலிங்கம் இல்லம் 424 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினையும், பசுபதி இல்லம்  383 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினையும், சபாபதி இல்லம் 348புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தினையும், காசிப்பிள்ளை இல்லம் 344 புள்ளிகளுடன்   5ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
 
விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதம விருந்தினரின் பாரியார் வைத்தியர் கலைச்செல்வி அகிலன் அவர்கள் வழங்கி கெளரவித்தார், அதனை தொடர்ந்து  நன்றி உரையுடன், கல்லூரி கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.


இந்துவின் இணையதிற்காக கொழும்பில் இருந்து தர்மரட்ணம் சுஜீவன்.

 

 

Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube