Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Inter-house Athletic Meet 2016 held on 3rd Feb; Chief Guest Dr.R.Varathan
Posted on: 05/02/2016 (Friday)
The annual inter-house athletic meet of Jaffna Hindu was held on the last Wednesday, 3rd Feb 2016, at the college ground. Dr.Ranganathan Varathan, an old boy of Jaffna Hindu working at the Negombo Base Hospital, graced the event as the chief guest. Chellathurai House scored 470 points and became the champions of the 2016 athletic meet. Nagalingam House was the first runner-up and Sabapathy House was the second runner-up.
 
2016ம் ஆண்டிற்கான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி 3-02-2016 புதன் கிழமை அன்று கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமயில், இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்தியருமாகிய வைத்திய கலாநிதி இரங்கநாதன் வரதன் அவர்கள்  சிறப்பித்தார்.
 
நண்பகல் 1.30 மணியளவில் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவ முதல்வர்கள் கல்லூரிக் கொடியினை ஏந்தியவாறு அணி நடையின் தலைமை பெறுப்பினை பெற்றுவர நாகலிங்கம், சபாபதி, பசுபதி, காசிப்பிள்ளை, செல்லத்துரை இல்லங்கள் தத்தமது வர்ண நிறக்கொடிகளுடன் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்,
 
எமது கல்லூரியின் பெருமை பொருந்திய நீலம் வெள்ளை கொடியானது 5 இல்லங்களினைச் சேர்ந்த இல்ல தலைவர்களினால் எடுத்துவரப்பட்டு  கொடிக் கீதம் இசைக்க கல்லூரி சிரேஷ்ட மாணவ முதல்வனால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இல்லக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.  5 இல்லக் கொடிகளும் மோட்டார் வண்டி பவனியாக மைதானத்தினை சுற்றி வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.
 
சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டி விதிகளுக்கமைவாக கல்லூரி சிரேஸ்ட மாணவ முதல்வனின் வழிகாட்டலில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  ஒலிம்பிக் தீபமாது கல்லூரி மெய்வல்லுனர் சாதனையாளரினால் எடுத்து வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 
தரம் 6 மாணவர்களின் இடைவேளை நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.
 
செல்லத்துரை இல்லமானது 470 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து நாகலிங்கம் இல்லம் இரண்டாம் இடத்தினையும், பசுபதி இல்லம் மூன்றாம் இடத்தினையும், சபாபதி இல்லம் 4 ஆம் இடத்தினையும், காசிப்பிள்ளை இல்லம்  5ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
 
விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி.விஜயரதி வரதன் அவர்கள் வழங்கி கெளரவித்தார், அதனை தொடர்ந்து உதவி சிரேஷ்ட மாணவ முதல்வனின் நன்றி உரையுடன், கல்லூரி கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து சுஜீவன். புகைப்படங்கள் தனவேந்தன் மாலவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube