Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

இயற்கை அன்னையால் இந்து அன்னையின் ஆட்டம் சமநிலைக்கு சென்றது
Posted on: 04/05/2013 (Saturday)

யாழ் இந்து கல்லூரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட சமர் முதல் நாள் முழுவதும் மழையால் கழுவப்பட இரண்டாம் நாள் மட்டும் நடந்து வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.ஒருநாள் ஆட்டம் என்றாலும் யாழ் இந்து கல்லூரி தனது முத்திரையை பதிக்க தவறவில்லை.முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி 59 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்தி கொள்ள பதிலுக்காடிய யாழ் இந்து 183 ஓட்டங்களை 6 விக்கெட் இழந்து ஆடிய வேளையில் போட்டி முடிவுக்கு வந்தது. யாழ் இந்து கல்லூரி வெறும் 30 ஓவர்களில் 183 ஓட்டங்களை பெற்றிருந்தது மதுசன் மற்றும் கல்கோகனின் அதிரடி ஆட்டத்தால் என்பது குறிப்பிடத்தக்கது.மழையால் போட்டி குழம்பாதிருந்திருப்பின் யாழ் இந்துக்கான வெற்றி வாய்புகள் பிரகாசமாகவே இருந்தது.

வெள்ளி (3 மே 2013)  ஆரம்பமாகிய ”இந்துக்களின் போர்” துடுப்பாட்டப் போட்டி வெள்ளி சனி இரண்டு நாட்களும் கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெள்ளி முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக நேற்றைய தினம் ஆரம்ப வைபவம் மட்டுமே நடைபெற்றது. போட்டியின் இரண்டாம் நாளாகிய சனி முதல் நிகழ்வாக நாணயச் சுழற்சி இடம்பெற்றது. நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணித்தலைவர் வாமணன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்தார்.

இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 59 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றவுடன் தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில்,

ஹசான் - 61 (10 Fours)
தர்சிகாந் - 50 (6 Fours) (1 Six)
கிருசாந் - 42 (3 Fours) (3 Sixes) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்,

மதுசன் - 5 விக்கெட்டுக்கள்
பானுகோபன் - 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதன் பின் முதல் இனிங்ஸில் 202 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை விரைவாக கொண்டு சென்ற யாழ் இந்துக் கல்லூரி அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.இதனால் இப் போட்டியானது சமனிலையில் முடிவுற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் ,

மதுசன் - 91 (13 Fours) (3 Sixes)
கல்கோகன் - 47 (6 Sixes)

பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில்,

திவாகரன் - 4 விக்கெட்டுக்கள்.

இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது ஹசானிற்க்கும் (C.H.C), சிறந்த பந்துவீச்சாளர் விருது மதுசனிற்க்கும் (J.H.C), சிறந்த களத்தடுப்பாளர் விருது கிருசானிற்கும் (C.H.C), இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது மதுசனிற்க்கும் (J.H.C) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அடுத்த வருடம் ”இந்துக்களின் மாபெரும் போர்” யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recent Posts
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube