Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

College Annual Prize day held yesterday;Mr.Rajasingham Vickneswaran was chief guest
Posted on: 04/07/2014 (Friday)

Jaffna Hindu College annual prize day 2014 celebrations held grandly yesterday at Cumaraswamy Hall. Mr.Rajasingham Vickneswaran was the chief guest for the event. It was started with prayers at Gnana Vairavar temple, chief guest and principal were honoured and processioned to the hall by college western band group.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசுத்தின விழாவானது 04/07/2014 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்களின் தலமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பழைய மாணவன் திரு.ராஜசிங்கம் விக்னேஸ்வரன் (FCA in Singapore and UK, FCMA UK, FCPA Australia)  அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துசிறப்பித்தார்.

காலை 9.00 மணியளவில் ஞானவைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு ஆராதனையினை தொடர்ந்து விருந்தினர்கள் மேற்கத்தேய இசைக் கருவி அணிவகுப்புடனும் கல்லூரி சாரணர்கள், சேவைக் கழக அங்கத்தவர்களின் அணிவகுப்பு மரியாதையுடனும் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே ஆரம்பமாகின.

கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் சிரேஸ்ட மாணவ முதல்வன் செல்வன்.குணவரனின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைதொடர்ந்து கல்லூரி அதிபரினால் இவ்வாண்டுக்கான பரிசில் தின அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கல்வி, விளையாட்டு மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கான பரிசில்களை பிரதமவிருந்தினரின் பாரியார் திருமதி.செந்தூர்செல்வி விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிகெளரவித்தார்.அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி 2013ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் 350 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 64 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், 23மாணவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

பிரதம விருந்தினர் அவர்கள் தனது உரையில் கல்லூரி மாணவர்களினை கல்வி செயற்பாடுகளில் மட்டுமல்லாது அனைத்து இணைபாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு யாழ் இந்துவின் பெருமையினை நிலை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.


இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்

நிகழ்வுகள் யாவும் கல்லூரி கீதத்துடன் பி.ப 2.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

இந்துவின் இணையத்திற்காக இலங்கையில் இருந்து த.சுஜீவன். புகைப்படங்கள் த.மாலவன் (2016 உயர்தரம்) மற்றும் மதீபன்.

 

Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube