Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Canada

கனடா கலையரசி ஒரு சிறப்பான இசைநடன இரவு
Posted on: 21/10/2013 (Monday)
ஒக்ரோபர் மாதம் பன்னிரெண்டாம் நாள் (12/10/2013) Chinese Cultural Centre மண்டபத்தில் கலையரசி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. 
 
தமிழர் பாரம்பரியத்திற்கு ஏற்ப மங்கல விளக்கேற்றலுடன் குறித்த நேரத்தில் விழா ஆரம்பமானது. தொடர்ந்து கல்லூரிக்கீதத்தை செளமியா ஜெயராசாவும் அபிசன் ரிசியனும் இசைத்தார்கள். அடுத்து தேசியகீதம் தர்சா ராசலிங்கம் அவர்களால் பாடப்பட்டது. அகவணக்கத்தைத்தொடர்ந்து வந்தோரை வரவேற்கும் நம் தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப திரு. ரவீந்திரன் அவர்கள்  வரவேற்புரை வழங்கினார்.
 
மேலும் நாட்டியக்கலைமணி ஸ்ரீமதி மாலினி பரராசசிங்கம்  அவர்களின் மாணவிகள் புஸ்பாஞ்சலியுடன் வரவேற்பு நடனத்தை வழங்கி சபையோர் பாராட்டைப்பெற்றனர். ஆடலரசி ஸ்ரீமதி செந்தில், செல்வி சுரேஸ்வரனின் மாணவர்கள் Fusion வடிவிலான நடனத்தை விறுவிறுப்பாகவும் மனதைக்கவரும் வகையிலும் வழங்கினார்கள். ”திரை நடமிடும் தேவியர் இருவர்” என்னும் நடன நிகழ்ச்சியினை யாழினி ராஐகுலசிங்கமும் நிவேதா இராமலிங்கமும் இணைந்து வெகு சிறப்பாக சபையோர் மெய்மயங்கும் வகையில் வழங்கினார்கள். பிருந்தாவனத்தில் ஓர் நாள் என்னும் நடன நிகழ்ச்சியில் பூங்குழலி இளங்குமரன் அவர்களின் மாணவர்கள் கண்ணணின் குறும்புகளை  அழகாக வெளிப்படுத்தினர்.
 
ஸ்ரீமதி நவராஐகுலம் முத்துக்குமாரசாமி அவர்களின்  நெறியாள்கையில் அவரது மாணவர்கள் ”இராகங்களின் சங்கமம்” என்னும் இசை நிகழ்ச்சியை  சிறப்பாக நடாத்தினர். 
 
இவ்விழாவில் கதிர்.சுபிரமணியம் அவர்கள்  தலைமை உரை வழங்கினார். அவர் தம் தலைமை உரையில் ”யாழ்.இந்துவின் பழைய மாணவர்களாகிய நாம் எமது இந்துக்கல்லூரியின் உயர்வுக்காக எம்மாலான பங்களிப்புகளைச்செய்வது மிகவும் இன்றியமையாதது” என விளக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிட்டார்.
 
வழமைபோல யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் ”கல்யாணப்பேச்சு ”என்னும்  நாடகத்தை வழங்கினர். இளைப்பாறிய இந்துமகளிர் கல்லூரி ஆசிரியர் செல்வி. குழந்தைவேலு அவர்களின் இயக்கத்தில் யாழ்.இந்துமகளிர்கல்லூரி பழைய மாணவி தேவகி முனீஸ்வரராசா குழுவினர் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழ்வில் திருமணம் தொடர்பான பிரச்சினையை மையமாகக்கொண்டு சமகாலத்துக்கு ஏற்ற வகையில் அமைந்த  நாடகத்தை வெகு தத்ரூபமாக அரங்கேற்றினர். அதில் நடித்தவர்கள் அத்தனை பேருமே  தத்தம் பாத்திரங்களுக்கேற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வோடும் சிந்தித்து செயற்படும் வகையிலும் இந்நாடகம் அமைந்திருந்தது. சபையோரின் பலத்த கரகோசங்கள் பாராட்டுக்குரிய அங்கீகாரமாக அமைந்தது எனலாம்.
 
”நெஞ்சுபொறுக்குதில்லையே” என்னும் நாடகம் பொன்னையா விவேகானந்தன் அவர்களால் அரங்காக்கம் செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் காலத்துக்கு ஏற்ற கதையைக்கொண்டதாகவும் பங்கு கொண்ட நடிகர்கள் மூவரும் தம் நடிப்புத்திறனை சிறப்பாக தம் பாத்திரங்களை உணர்ந்து அதற்கேற்ப வெளிப்படுத்தியதையும் உணரமுடிந்தது. 
 
பிரபல சட்டத்தரணி  மனுவல் யேசுதாசன் அவர்கள் தம் குழுவினருடன் ”வேந்தனின் சீற்றம்” என்னும் நாட்டுக்கூத்தினை மேடையேற்றினார். அவ் பாரம்பரிய கலையினை கண்டு சபையோர் குதூகலம் அடைந்தனர்.
 
வேணுகானவாருதி கலாநிதி செல்வநாயகம் தயாபரன், செல்வநாயகம் சண்முகலிங்கம், நிரோசன் சுகுமார், மதுசன் சுகுமார் ஆகியோர் இணைந்து வாத்திய இசை நிகழ்ச்சியினை வெகு சிறப்பாக வழங்கினர்.
 
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திரு.சி. சிற்றம்பலம்  அவர்கள் தம் பிரதமவிருந்தினர் உரையில் யாழ் இந்துக்கல்லூரியில் தான் கற்றகாலத்திலும் கற்பித்தகாலத்திலும் உள்ள நிலைமைகளை பசுமையான நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்துக்கல்லூரியின் சிறப்புக்கள் பற்றியும் பெருமையுடன்  கூறி மகிழ்ந்தார்.
 
யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் - கனடா நடாத்திய மாணவர்களுக்கான கணிதம், பொதுஅறிவு, தமிழ் போட்டிகளுக்கான சான்றிதழ்களும், அதில் கூடிய புள்ளிகள் பெற்றவர்களுக்கு பரிசில்களும்  இவ்வைபவத்தில் வழங்கப்பட்டன. செயலாளர் .கிருஸ்ணானந்தன் அவர்கள் தன் நன்றி உரையில் கலையரசி விழாவை சிறப்பாக நடாத்த உதவியவர்களுக்கு நன்றி கூறினார்.
 
காயித்திரி ஸ்ரீகதிர்காமநாதன், ரெபேக்கா ரவீந்திரன் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கினார்கள். 
 
ஒலிவாங்கி இடையிடையே சிறுசிறு குழப்பதைக்கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாகப்பார்க்கும் போது கலையரசி விழா சிறப்பாக இனிது நடந்தேறியது.

Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube