Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

இந்துக்களின் மாபெரும்போர் - கொழும்பு இந்துவை எதிர்த்து களமிறங்குகிறது யாழ் இந்து
Posted on: 30/04/2013 (Tuesday)

இந்துக்களின் மாபெரும் போர் எனப் பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.இந்தப் போட்டி மீள ஆரம்பிப்பது கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட் பாரம்பரியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமையவுள்ளது.

இவ்வருடத்துக்கான போட்டிகள் எதிர்வரும் மே 3ம், 4ம் திகதிகளில் கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

1982ம் ஆண்டு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்துக்களின் மாபெரும் போர், முதன்முறையாக கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வருடப் போட்டிகள் 1983ம் ஆண்டு இடம்பெற்றிருந்ததோடு, அப்போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.

ஆனால் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்குமிடையிலான பயணம் கடினமானதாக மாறியதைத் தொடர்ந்து இந்த இந்துக்களின் மாபெரும் போர் தொடர் நடாத்தப்படாது விடப்பட்டிருந்தது.

அதற்குப் பின்னர் 1996ம் ஆண்டுக்குப் பின்னர் 2007ம் ஆண்டுவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இரு அணிகளும் 'Big Match' '100 வருடச் சவால்க் கிண்ணம்' போன்ற பெயர்களில் போட்டிகளில் மோதியிருந்தன.2005 ஆம் ஆண்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியால் இந்துக்களின் யுத்தம் (Battle of Hindus) என்ற பெயரில் மீண்டும் புத்துயிர் பெற்றது. அதன் பின்னரும் போர் சூழ்நிலை காரணமாக தொடரமுடியவில்லை. (2005 ஆண்டு இந்துக்களின் யுத்தம் படங்கள்)

இம்முயற்சி வடக்கிற்கும், மேற்கிற்குமிடையிலான இந்தப் போட்டிகள் இரு பகுதிகளுக்குமிடையிலான தமிழ் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு தொடர்ந்து வரும் காலங்களிலும் இந்தத் தொடரைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி எப்போதுமே பலமான கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாகத் திகழும் அவ்வணி, இந்துக்களின் போரிலும் பலத்த போட்டியை வழங்கும் அணியொன்றாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவரான V.வாமனனின் தலைமையில் இந்துக் கல்லூரி அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றது.கொழும்பிலுள்ள முன்னணித் தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு இந்துக் கல்லூரி  அண்மைக்காலத்தில் விளையாட்டில் மிகச்சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிவரும் அணியாகக் காணப்படுகிறது.குறிப்பாக, அண்மையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கொழும்புப் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த V-H சவால்க் கிண்ணப் போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணியே வெற்றிபெற்றிருந்தது.இவ்வணியின் தலைவராக A.யசோதரன் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு வருகின்ற அதேவேளை, இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக A.மானுவேல் செயற்பட்டு வருகின்றார்.

இரண்டு பலமான அணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை இரசிகர்களாகக் கொண்ட ஆதரவு, பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு, நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும்,கொழும்பு இந்துக் கல்லூரி இற்குமிடையிலான இந்த இந்துக்களின் மாபெரும் போரை அதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றுகின்றன.

 

கொழும்பு இந்துக் கல்லூரி

நிற்பவர்கள - இடமிருந்துவலமாக:
வி.சுதர்ஷன்,எஸ்.தினேஷ்,என்.கிருஷான்,எஸ்.ஹரிகரன்,வை.தர்ஷிகாந்த்,எஸ்.ஸ்டீபன்,ஏ.சுசந்தன்,
எஸ்.ஹரேந்திரன்,என்.எஸ்.ஹஷான் கவின் கௌதம்,எஸ்.குமராஷன்,எஸ்.மதுஷன்

அமர்ந்திருப்போர்:
பி.இந்திரஜித் (விக்கெட் காப்பாளர்),ஏ.மானுவல் (பயிற்றுவிப்பாளர்),ஆர்.திவாகரன்,ஐ.இராசரத்தினம் (அதிபர்)
ஏ.யசோதரன் (அணித்தலைவர்),எஃப்.கமில்ஸ் (விளையாட்டுப் பொறுப்பதிகாரி),எக்ஸ்.ஜீவிதாசன்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அமர்ந்திருப்பவர்கள் - இடமிருந்துவலமாக:

எஸ்.நிமலன் (உப அதிபர்),திருமதி எஸ்.சுரேந்திரன் (உப அதிபர்),கே.பகீரதன் (பொறுப்பதிகாரி),வி.வாமணன்  (அணித்தலைவர்),
வி.கணேசராஜா (அதிபர்), ஜே.சஜீகன் (உப தலைவர்),கே.கே.வாசவன் (அணிமுகாமையாளர்),
பி.ஜெயரட்ணராஜா (விளையாட்டுப் பொறுப்பதிகாரி),பி.ஞானதேசிகன் (பிரதிஅதிபர்)

நிற்பவர்கள்:
1ம் வரிசை:

பி.ஜனவத்சசர்மா, ஜே.கல்கோகன்,ஆர்.றுக்ஸ்மன்,ஏ.கௌரிசங்கர், எஸ்.சாரங்கன்,வி.குகானன்,
எம்.சிவஜெனன்,ஜி.மதுஷன்,என்.நிலோஜன் டிலக்ஷன்,ஜே.உதயன்

2ம் வரிசை:
ரி.பானுகோபன்,ஆர்.கஜானந்,வி.சிந்துஜன்,எம்.துவாரகன்


 

Recent Posts
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube