Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Posted on: 02/03/2017 (Thursday)
 
The 8th Battle of Hindus: the big match between Colombo and Jaffna Hindu Colleges will be played from 3rd to 4th March 2017 at the Hindu College grounds at Bambalapitiya. Before the start of this cricket encounter, they will also battle against each other at a football tournament on Thursday, the 2nd March 2017. In addition to these, the two schools debate teams will meet each other on the evening of Friday, 3rd March 2017, at the main hall of Colombo Hindu College. Closing the battle of Hindus is a cricket match on the last day, Sunday 5th March 2017, between the old boys of both schools. On the morning of Saturday, 4th March, a walk against drug usage is organized. 
 
 
"இந்துக்களின் போர்” என்று பெருமையாக அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 8வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது மார்ச் மாதம்3,4ம் திகதிகளில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
அத்துடன் இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 02.03.2017 வியாழக்கிழமை(இன்று) இடம்பெறவுள்ளது. அத்துடன் 03.03.2017 வெள்ளிக்கிழமை இரு கல்லூரிகளினதும் விவாத அணிகள் மோதிக்கொள்ளும் "சொல்லாடல்" விவாதக் களம் மாலை 6.31 மணியளவில் கொழும்பு இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அத்துடன் இறுதி நாளில் இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் நாட்டில் நிலவிவரும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான நடைபவனி - சனி காலை(04.03.2017) 7.30 மணிக்கு நடைபெறும். "பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் பாவனை நிறுத்தவேண்டும் என பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.
 
நாட்டில் பெருகி வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக, யாழ் இந்து கல்லூரியும், பம்பலப்பிட்டி இந்து கல்லூரியும் இணைந்து விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் அதிபர் பரமேஸ்வரன் 27.02.2017 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
 
                             02.03.2017 - வியாழன்  - 8.30  - உதைபந்தாட்ட போட்டி
                              03.03.2017 - வெள்ளி 8.30 - துடுப்பாட்ட பெருஞ் சமர் ஆரம்பம்
                             03.03.2017 - வெள்ளி 18.31 - சொல்லாடம் - விவாதச் சமர்
                             04.03.2047 - சனி 7.30 - போதைபொருளுக்கு எதிரான நடைபவனி
                             04.03.2017 - சனி 9.30 துடுப்பாட்ட பெருஞ் சமர் இறுதிநாள் 
                             05.03.2017 - ஞாயிறு 8.30 பழைய மாணவர்களுக்கிடையிலான  துடுப்பாட்ட போட்டி
 
இந்துக்களின் போர் - ஒரு அலசல்
 
”இந்துக்களின் போர்” எனும் துடுப்பாட்ட போட்டியானது யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான நட்புறவுடன் கூடிய துடுப்பாட்டப் போட்டியாகும். கடந்த வருடம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான 8 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது மார்ச் மாதம் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) 3,4ம் திகதிகளில் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
1982ம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்துக்களின் மாபெரும் போர் கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்திலும், தொடர்ந்து  1983 ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்திலும் இடம்பெற்றது.
 
கடந்த வருடம் போட்டி சமநிலையில் முடிவடைந்தநிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது. நடந்து முடிந்த 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியும்  ஒரு போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியும் வெற்றிவாகை சூடியுள்ளது, மற்றைய மூன்று போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்தது.இதனடிப்படையில் 3-1 என்று இருக்கின்ற நிலையில் இம்முறை யாழ் இந்துக் கல்லூரி வென்று 3-2 நிலைபெறுமா என்கிற ஆர்வம் பலருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
மூன்று தசாப்த பழமை வாய்ந்த இந்த துடுப்பாட்ட போட்டியானது இரண்டு பலமான அணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை ரசிகர்களாகக் கொண்ட ஆதரவு, பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு, நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி இற்குமிடையிலான இந்த 8வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியை அதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றியுள்ளது.
 
இந்துவின் இணையத்திற்காக கொழும்பில் இருந்து சுஜீவன்.
 
Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube